டிக் டாக் செயலி கடந்த 2016 ஆம் ஆண்டு, சுமார் 75 மொழிகளில் பல
நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. சீன நிறுவனமான இந்த டிக் டாக் செயலியை இதுவரை
பல கோடி மக்கள்பதிவிறக்கம் செய்து
பயன்படுத்தி வருகின்றனர். தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வின் படி சென்ற ஆண்டில்
அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆப் டிக் டாக் ஆப் என்பதும் குறிப்பிடத்தக்கது
தனிநபர் சுதந்திரம்
பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, கல்லூரி
இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இந்தியாவில் டிக் டாக் செயலியைப்
பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தவறான வழியில்
செல்லுவதற்கு வழிவகுக்கிறது என்றும், தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது
என்றும் கடந்த வருடம் வழக்கு தொடரப்பட்டது.
32.3 கோடி முறை டவுன்லோடு
டிக்டாக் பயனர்கள் எண்ணிக்கையை
எடுத்துக் கொண்டால் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது.
ஃபேஸ்புக்குடன் ஒப்பிடும் போது டிக்டாக் செயலியில் பயனர்கள் செலவிட்ட நேரம் 15
சதவீதம் வரை அதிகரித்துள்ளது. டிசம்பரில் ஆண்ட்ராய்டு தளத்தில் டிக்டாக்
பயனர்கள் எண்ணிக்கை 40 சதவீதம்
அதிகரித்துள்ளது. இந்தியாவில் 2019-ம் ஆண்டில் மட்டும் டிக்டாக் செயலி ஐ.ஒ.எஸ்.
மற்றும் ஆண்ட்ராய்டு தளத்தில் சுமார் 32.3 கோடி முறை டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.
டாங்கி (Tangi)
இந்த நிலையில் டிக்டாக் செயலிக்கு
போட்டியாக கூகுள் நிறுவனத்தின் டாங்கி (Tangi) எனும் செயில களமிறங்கவுள்ளது,மேலும்
இது டிக்டாக் செயலியைப் போன்று குறுகிய வீடியோக்களை உருவாக்கலாம் என்று
கூறப்படுகிறது.
ஒரு நிமிட அளவிலான குறுகிய வீடியோ
மேலும் இந்த டாங்கி செயலி முற்கட்டமாக
இணையதளம் மற்றும் ஐஒஎஸ் தளத்தில் அறிமுகம் செய்யப்படும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் புதிய விஷயங்களை இந்த டாங்கி செயலி மூலம்
கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பல புதுமையான விஷயங்கள் புகுத்தப்படுகிறது
என்றும் ஒரு நிமிட அளவிலான குறுகிய வீடியோக்களைஇதில் உருவாக்கலாம் என்றும் டாங்கி
செயலி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதளம் மற்றும் ஐ.ஒ.எஸ்
தற்போது சோதனையில் இருக்கும் இந்த
டாங்கி செயலி விரைவில் இணையதளம் மற்றும் ஐ.ஒ.எஸ் தளங்களில் அறிமுகப்படுத்தப்படும்
என்று தகவல் வெளிவந்துள்ளது. கண்டிப்பாக இந்த செயலி வெளிவந்தால் டிக்டாக்
செயலிக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கடந்த ஆண்டு ஐஒஎஸ் மற்றும்
ஆண்ட்ராய்டு தளங்களில் அதிகளவு மக்கள் டிக்டாக் செயலியை டவுன்லோடு
செய்துள்ளனர். அதேபோல் இந்த இரண்டு
இயங்குதளங்களிலும் பேஸ்புக் செயலியை சுமார் 15.6கோடி முறை டவுன்லோடு
செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக