சென்னை வடபழனியில் உள்ள பிரபல அம்பிகா எம்பயர் என்ற நட்சத்திர சொகுசு விடுதி ஒன்றை விற்க போவதாக கூறி மூன்று பேர், கேரள கட்டுமான நிறுவனத்தை அணுகியுள்ளனர். இதனையடுத்து அந்த நிறுவன மேலாளர், விற்பதாக கூறப்படும் நட்சத்திர விடுதியை பார்வையிட வந்துள்ளார்.
பின்னர் அவரை அழைத்து வந்த தரகர்கள், அதே நட்சத்திர விடுதியில், அவருக்கு தெரியாமல் அறை ஒன்றை புக்கிங் செய்து அதில் தங்க வைத்துள்ளனர். தொடர்ந்து நட்சத்திர விடுதியை பார்வையிடுவது போல், சுற்றிக்காட்டிய மூவரும் 165 கோடி ரூபாய்க்கு விடுதியை பேரம் பேசியுள்ளனர்.
இயதையடுத்து, அவர்களின் நடவடிக்கையால் சந்தேகம் அடைந்த நட்சத்திர விடுதியின் மேலாளர், போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். விடுதிக்கு வந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்த போது தான், நூதன மோசடி தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தரகர்கள் தட்சணாமூர்த்தி, பரமானந்தன், கருணாகரன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
இதுபோன்று பலரிடமும் ஏமாற்றி இந்த கும்பல் மோசடி செய்துள்ளதும், விசாரணையில் தெரியவந்ததால், அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக