Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

பள்ளி மாணவர்களைக் கடத்திய நாம் தமிழர் கட்சி தொண்டன் – ஏன் தெரியுமா?


 நாம் தமிழர் ராகுல்
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ராகுல் என்ற இளைஞர் பள்ளி மாணவர்களைக் கடத்திச் சென்ற சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாழாக்குடி அரசு தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த 10 வயதுக்குட்பட்ட மாணவர்கள் 6 பேர் காணாமல் போனதாக தகவல் கிடைக்கவே பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இதையறிந்த அப்பள்ளியின் தலைமை ஆசிரியை உடனடியாக போலீஸில் புகார் கொடுத்தார். தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய்ச் போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நாம் தமிழர் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அந்த குழந்தைகளை மீட்டனர்.

சம்மந்தப்பட்ட 6 மாணவர்களில் இருவரின் உறவினரான ராகுல் என்பவர்தான் குழந்தைகளை காரில் அழைத்து வந்து நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறையில் சேர்க்க முயன்றதாக சொல்லப்பட்டது. இதனால் குழந்தைகளின் பெற்றோர் ராகுல் மேல் புகார் அளிக்கவில்லை. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை உருவானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக