நடிகை அமலாபால் தமிழ் சினிமாவில் மைனா
என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில்
இவரது நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இதனை தொடர்ந்து தற்போது இவரது நடிப்பில் அதோ அந்த பறவை போல என்ற திரைப்படம்
ரிலீஸக்கு தயாராகி வருகிறது.
இதனை
அடுத்து இவரது திரையுலக பயணத்தில் புதிய மைல்கல்லாக பாலிவுட் வெப் சீரிஸில்
நாயகியாக அறிமுகமாக உள்ளார். இயக்குனர் மகேஷ் பட் இயக்கத்தில் உருவாகி வரும்
வெப் சீரிஸில், இவர் நாயகியாக நடிக்க உள்ளார்.
நடிகை
அமலாபால் இதுகுறித்துக் கூறுகையில், சில ஆச்சரியங்கள் அறிவிப்பின்றி வாழ்க்கை
வந்து விடுகிறது. அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு தான், இயக்குனர் மகேஷ் பட்டிடம்
இருந்து கிடைத்திருக்கும் வாய்ப்பு என பெருமையுடன் தெரிவித்துள்ளார். மேலும்
அவருடன் வேலை செய்வது தென்னிந்திய நடிகைகள் அனைவருக்கும் ஒரு கனவு. அவர் திரையில்
உருவாக்கும் என் கதாபாத்திரங்கள் வலுவானது, உணர்வுபூர்வமானது என தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக