Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 10 பிப்ரவரி, 2020

கொரோனா வைரஸ்-க்கு அதிகாரப்பூர்வ பெயரை வெளியிட்டது சீனா..!

கொரோனா வைரஸ்-க்கு அதிகாரப்பூர்வ பெயரை வெளியிட்டது சீனா..!

வுஹான் கொரோனா வைரஸுக்கு ஒரு புதிய அதிகாரப்பூர்வ பெயரை வெளியிட்டுள்ளது சீனா அரசு!!
சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள வுஹான் நகரத்தில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 811 பேர் பலியாகி உள்ளனர். நேற்று மட்டும் 86 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீன அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வந்தாலும், கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. அங்கு பாதிப்புக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. சீனாவில் இதுவரை 34 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், வுஹான் கொரோனா வைரஸுக்கு ஒரு புதிய அதிகாரப்பூர்வ பெயரை வெளியிட்டுள்ளது சீனா அரசு. கொரோனா வைரஸு புதிய பெயர் "நோவல் கொரோனா வைரஸ் பினெமோனியா
(Novel Coronavirus Pneumonia - NCP) என தெரிவித்துள்ளனர். மேலும், இனி அமைத்து மருத்துவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் இந்த பெயரை உபயோகிக்குமாறு தெரிவித்துள்ளனர். 
கடந்த 2002-2003 ஆம் ஆண்டு, 24 நாடுகளில், 'சார்ஸ் வைரஸ்' எனப்படும் தீவிர சுவாசக் கோளாறு நோய் தாக்கியதில், 774 பேர் உயிரிழந்தனர். தற்போது, கொரோனா வைரசால், சீனாவின் ஹுபேய் மாகாணத்தில் மட்டும், 780 பேர் உட்பட, 811 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும், 34 ஆயிரத்து 800 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
மேலும், சீனாவிலிருந்து கொரானா வைரஸ் அதிகம் பரவ வாய்ப்புள்ள நாடுகளில் இந்தியா 17ஆவது இடத்தில் இருப்பதாகவும், இந்தியாவில் டெல்லி, மும்பை, கொல்கத்தா விமான நிலையங்கள் வாயிலாக கொரானா வைரஸ் பரவ அதிக வாய்ப்பு  உள்ளதாகவும் ஆய்வுத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக