மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கான
தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் நிர்வாகத்தில்
செயல்பட்டு வரும் பல்வேறு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிகளில் சேர்வதற்கான
'மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு' நடைபெறும். இந்த தேர்வு இந்தாண்டு ஜூலை மாதம்
5-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்
வெளியிட்டுள்ளது.
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க
விரும்புபவர்கள் www.ctet.nic.in எனும்
இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கால்.
தமிழகத்தில் இந்த தேர்வுக்காக சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி ஆகிய 4
மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வுக்கான அனுமதி அட்டையினை
தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்பாக www.ctet.nic.in
எனும் இணையதளத்திலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம்
செலுத்தக் கடைசி நாள் 27-2-2020 ஆகும். மேலும் தேர்வு தொடர்பான கூடுதல்
தகவல்களுக்கு https://ctet.nic.in/ எனும்
இணையதளத்தை பார்வையிடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக