புதிய நிறங்களில் வால் பேப்பரை மாற்றிக்கொள்ளும் வசதியை
வாட்ஸ் ஆப்பில் அறிமுகம் செய்கிறது பேஸ்புக் நிறுவனம்.
வாட்ஸ்
ஆப் செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியதிலிருந்து பல புது புது அப்டேட்டுகள் வந்த
வண்ணம் உள்ளன. வாட்ஸ் ஆப் டார்க் மோடை தொடர்ந்து 6 புதிய நிறங்களில் வால் பேப்பரை
மாற்றும் அப்டேட் ஒன்றை வாட்ஸ் ஆப் செயலில் பேஸ்புக் கொண்டுவரவுள்ளது.
வாட்ஸ்
ஆப் பீட்டா வெர்ஷன் 2.20.31 விரைவில் கூகுள் ப்ளே ஸ்டோரில் வழங்கப்பட உள்ளது.
இதில் இந்த அப்டேட் இருக்கும். கறுப்பு, அடர் ப்ரவுன், அடர் நீலம், ஆலிவ் நிறம்,
அடர் பர்பிள் மற்றும் அடர் வெல்வெட் என 6 புதிய நிறங்கள் வழங்கப்படுகிறது.
இதனை
செயல்பாட்டிற்கு கொண்டு வர வாட்ஸ் ஆப் சென்று, அதன் பின்னர் Settings - Chats
option - Wallpaper - Solid Colour என கிளிக் செய்து பிடித்த நிறத்தை
வைத்துக்கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக