Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 8 பிப்ரவரி, 2020

ஆட்டோ எக்ஸ்போவில் வரிசையாக மின்சார வாகனங்களை களமிறக்கிய ஹீரோ..!




 ந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டார்சைக்கிளஸ் 3 மின்சார வாகனங்களை2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்து ஆச்சரியம் அளித்துள்ளது.

ஹீரோ மோட்டார்சைக்கிளஸ் நிறுவனத்தின் மின்சார வாகன உற்பத்தி பிரிவான ஹீரோ எலெக்ட்ரிக், AE-29 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், AE-3 எலெக்ட்ரிக் ட்ரைக் மற்றும் AE-47 எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் ஆகிய மூன்று வாகனங்களை 2020 ஆட்டோ எக்ஸ்போவில் பொதுப் பார்வைக்கு கொண்டு வந்துள்ளது.

இதுகுறித்து நிகழ்வில் பேசிய ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் இயக்குநர் நவீன் முஞ்சால், வாகன பயன்பாட்டை மின்சார ஆற்றலுக்கு மாற்றுவதற்கான முயற்சியில் ஹீரோ தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதற்கேற்றவாறான தொழில்நுட்பங்களையும் உருவாக்கி வருகிறோம். இது நிச்சயமாக வாடிக்கையாளர்களை கவரும் என அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர், நாட்டின் வாகன பயன்பாட்டை 2030-ம் ஆண்டுக்குள் மின்சார ஆற்றலுக்கு மாற்றும் அரசின் கொள்கை முடிவுக்கு ஏற்ப ஹீரோ எலெக்ட்ரிக் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் எங்கள் நிறுவனம் நிச்சயம் வரலாறு படைக்கும் என்று அவர் தெரிவித்தார்.


2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மூன்று வகை இருசக்கர வாகனங்களான மோட்டார்சைக்கிள், டிரைக்கே மற்றும் ஸ்கூட்டர் போன்றவை, பல்வேறு போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கையை ஹீரோ எலெக்ட்ரிக் தெரிவித்துள்ளது.

அதன்படி, புதிய ஹீரோ எலெக்ட்ரிக் AE-47 மோட்டார்சைக்கிளில் 4kW எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 48V/3.5kWh லித்தியம்-அயன் பேட்டரி உள்ளது. துவக்க நிலையில் இருந்து 60 கி.மீ வேகத்தை 9 விநாடிகளில் எட்டிப்பிடித்து விடும் இந்த பைக் மணிக்கு 85 கி.மீ வேகத்தில் செல்லும்.
ஹீரோ எலெக்ட்ரிக் AE-47 மோட்டார்சைக்கிள்
 
அதேபோல AE-47 மோட்டார் சைக்கிளிலுள்ள பேட்டரிகளை முழுமையாக சார்ஜ் செய்தால், ஈகோ மோடில் போகும் போது 160 கி.மீ தூரம் வரை அதிகப்பட்சமாக செல்ல முடியும். அதேபோல பவர் மோடில் போகும் போது 85 கி.மீ வரை செல்ல முடியும். இந்த பேட்டரிக்களை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணிநேரம் ஆகும்.


இந்த பைக்கில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. அதில் இரண்டு சக்கரங்களில் டிஸ்க் பிரேக், காம்பி பிரேக் தொழில்நுட்பம், பின்பக்க மோனோஷாக் சஸ்பென்ஷன், க்ரூஸ் கண்ட்ரோல், ரிவெர்ஸ் ஃபங்க்‌ஷன், மொபைல் செயலி கனெக்ட்டிவிட்டி, ரியல்-டைன் வைக்கிள் டிராக்கிங்க், ஜியோ-ஃபென்சிங் போன்றவை முக்கிய சிறப்பம்சங்களாக உள்ளன.

ஹீரோவின் அடுத்த மின்வாகன மாடல் AE-29 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். இதில் 1kW எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 48V/3.5kWh லித்தியம்-அயன் பேட்டரி உள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 80 கி.மீ தூரம் செல்லும் இந்த ஸ்கூட்டர், மணிக்கு 55 கி.மீ வேகத்தில் செல்லும்.
ஹீரோ AE-29 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
 இந்த ஸ்கூட்டரில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி, ஆண்டி-தெஃப்ட் ஸ்மார்ட் லாக், மொபைல் சார்ஜர், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், வாக் அசிஸ்ட் மற்றும் ரிவெர்ஸ் ஃபங்க்‌ஷன் போன்ற முக்கிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.


ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் இறுதி அறிமுகம் AE-3 எலெக்ட்ரிக் ட்ரைக்கே வாகனம். இந்த வாகனத்தில் தானாக நிலைநிறுத்தக் கூடிய gyroscopic stability என்கிற நிலைத்தன்மை அம்சம் வழங்கப்பட்டுள்ளது.
AE-3 எலெக்ட்ரிக் ட்ரைக்கே
 இந்த ட்ரைக்கே வாகனத்தில் 5.5kW எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 48V/4kWh லித்தியம்-அயன் பேட்டரி பேக் உள்ளது. ஒருமுறை இந்த பேட்டரியை சார்ஜ் செய்தால் 100 கி.மீ வரை செல்லும், இந்த வாகனம் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் பயணிக்கும். மணிக்கு 26 கி.மீ உடன் கூடிய ரிவெர்ஸ் அசிஸ்ட் இந்த பைக்கில் உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமாக திகழ்கிறது ஹீரோ எலெக்ட்ரிக். 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அந்நிறுவனம் பல்வேறு வாகனங்களை பொதுப் பார்வைக்கு கொண்டு வந்துள்ளது. ஹீரோவி தயாரிப்புகள் நிகழ்ச்சியில் வரிசைப்படுத்தப்பட்டிருப்பது வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் கொண்டாட்டத்தை ஏற்படுத்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக