அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர்
ஹிட்டான படத்தின் இந்தி ரீமேக்கில் பிரபல நடிகர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
அஜித்குமாரின்
வீரம், வேதாளம் ஆகிய 2 படங்களும் இந்தியில் ரீமேக் ஆகிறது. இந்த இரண்டு படங்களும்
ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. வசூல் சாதனையும் நிகழ்த்தியது.
இதையடுத்து வீரம் படத்தை தெலுங்கில் கட்டமராயுடு என்ற பெயரில் எடுத்தனர்.
அஜித்குமார்
வேடத்தில் பவன் கல்யாண் நடித்தார். தற்போது இந்தியிலும் வீரம் படம் ‘பச்சன்
பாண்டே’ என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. இதில் அஜித்குமார் வேடத்தில் அக்ஷய்குமார்
நடித்து வருகிறார். சமீபத்தில் படத்தின் முதல் தோற்றத்தை வெளியிட்டனர்.
இதையொட்டி
அடுத்து வேதாளம் படமும் இந்தியில் ரீமேக் ஆகிறது. தமிழில் அஜித்குமாருடன்
சுருதிஹாசன், லட்சுமி மேனன், கபீர் சிங், சூரி, தம்பி ராமையா ஆகியோர் நடித்து
இருந்தனர். இந்த படத்தின் இந்தி ரீமேக்கில் அஜித்குமார் கதாபாத்திரத்தில் ஜான்
ஆபிரகாம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரோஹித்
தவான் இயக்கும் இந்த படத்தில் சுருதிஹாசன், லட்சுமி மேனன் கதாபாத்திரங்களில்
நடிக்க நடிகைகள் தேர்வு நடக்கிறது. இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி
உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக