ஏ2பி ரெஸ்டாரெண்ட் காதலர்கள் தினத்தில் சிங்கில்ஸை
குஷிப்படுத்த சிங்கில்ஸ் தோசையை இன்று முதல் விற்பனை செய்கிறது.
வரும் 14 ஆம்
தேதி காதலர்கள் தினம் என்பதால் காதலர்கள் அனைவரும் ஒரு வாரத்திற்கு முன்பாகவே
கொண்டாட்டத்தை துவங்கியுள்ளனர். எனவே, சிங்கில்ஸ் இதனால் கவலையுற கூடாது என
அவர்களை குஷிப்படுத்தும் விதமாக ஏ2பி ரெஸ்டாரெண்ட் கருப்பு நிறத்தில் சிங்கில்ஸ்
தோசையை அறிமுகம் செய்துள்ளது.
இன்று முதல்
(10 ஆம் தேதி) முதல் 16 தேதி வரை சிங்கிள்ஸ் தேசை சென்னை வேளச்சேரி, பள்ளி கரணை ,
ஓஎம்ஆர் - சிப்காட், அடையார் - எம்ஜி தெரு, கிழக்குத் தாம்பரம் - கேம்ப் ரோடு,
குரோம்பேட்டை, போரூர், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள ஏ2பி உணவகங்களில்
விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
தோசையின் இந்த கருப்பு நிறத்திற்காக ஆக்டிவேட்டட் சார்கோல் பயன்படுத்தப்பட்டுள்ளது
எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, இதை அதிகமாகச் சாப்பிடக்கூடாது என்றும்
குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக