Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 10 பிப்ரவரி, 2020

டிஎன்பிஎஸ்சி-ஐ தொடர்ந்து சிஐஎஸ்எஃப் தேர்விலும் முறைகேடு..

Abuse in CISF exam found



டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 4 ஆகிய தேர்வுகளில் முறைக்கேடு நடந்தது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் சிஐஎஸ்எஃப் தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் முறைக்கேடு நடந்ததாக கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர் தேர்வில் முறைகேடு செய்ததாக நெல்லை மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் பணியாற்றி வந்த சிஐஎஸ்எஃப் வீரர் பிரிகு பாருயா என்பவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பயிற்சியின் போதான தேர்வில் சரிவர தேர்ச்சி பெறாததால் பிரிகு பாருயா மீது சந்தேகம் எழுந்த நிலையில் அவர் முறைகேடு செய்து பணியில் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக