டிஸ்னி + ஸ்ட்ரீமிங் சேவை இந்தியாவில் வரும்
மார்ச் 29 ஆம் தேதி, இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்ற அதிகாரப்பூர்வ தகவலை
நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆனால் டிஸ்னி பிளஸ் சேவை இந்தியாவில் ஹாட்ஸ்டார்
சேவையுடன் தான் அறிமுகம் செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஸ்னிக்கு
சொந்தமான ஹாட்ஸ்டார்
கடந்த ஆண்டு அறிக்கையில்
தெரிவித்துள்ளபடி, ஃபாக் (Fox) நிறுவனம் டிஸ்னி நிறுவனத்தைக் கையகப்படுத்திய
பின்னர் டிஸ்னிக்கு சொந்தமான இந்தியாவைச் சேர்ந்த ஸ்ட்ரீமிங் சேவையான ஹாட்ஸ்டார்
மூலம் தான் டிஸ்னி பிளஸ் சேவை வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தது. ஆனால்
அறிக்கையின் படி தெரிவிக்கப்பட்ட தகவல்களில் ஒன்று மட்டுமே மாறியுள்ளது.
டிஸ்னி
பிளஸ் அறிக்கையின்படி கூறப்பட்டது
கடந்த ஆண்டு அறிக்கையின்படி மாறியுள்ள
வித்தியாசம் என்னவென்றால், டிஸ்னி பிளஸ் சேவை 2020 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில்
அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்திருந்தது, ஆனால், இப்போது அதற்கு முன்பே
முன்பே வெளியிடப்படுகிறது. காலாண்டு வருவாய் அழைப்பின் போது டிஸ்னியின் தலைமை
நிர்வாக அதிகாரி பாப் இகெர் இந்த தகவலை வெளியிட்டார்.
மில்லியன்
கணக்கான பயனர்களை ஈர்க்க முடிவு
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2020
தொடங்கும் அதே நாளில், டிஸ்னி + இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.
ஹாட்ஸ்டாரால் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வுகளில் இந்தியன்
பிரீமியர் லீக் ஒன்றாகும், இதன் போது மில்லியன் கணக்கான பயனர்களை ஈர்க்க முடியும்
என்று நிறுவனம் நம்பியுள்ளது.
டிஸ்னி
+ ஹாட்ஸ்டார் திட்ட விபரங்கள்
ஹாட்ஸ்டார் தற்போது இரண்டு உறுப்பினர்
திட்டங்களை வழங்கி வருகிறது. தற்பொழுது ஹாட்ஸ்டார் விஐபி மற்றும் ஹாட்ஸ்டார்
பிரீமியம் என்ற இரண்டு திட்டங்களை வழங்குகிறது. மார்ச் மாதம் முதல டிஸ்னி +
மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் என்ற புதிய பெயருடன் இரண்டு திட்டங்களை
வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விலை
பற்றிய அறிவிப்பு எப்பொழுது?
முந்தைய ஹாட்ஸ்டார் பயனர்களுக்கு
இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று நிறுவனம் உறுதிபட தெரிவித்துள்ளது. இந்த
புதிய சேவைக்கான விலை கட்டமைப்பில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்படுமா என்பது
குறித்து தகவல் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை. ஹோஸ்டார் விலைகளை அதிகரிக்கும்
என்று பரவலாக ஊகிக்கப்படுகிறது, ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை
காத்திருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக