Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 19 பிப்ரவரி, 2020

Google எடுத்த அதிரடி முடிவு: இனி அனைத்து ரயில்வே ஸ்டேஷனிலும் அந்த சேவை கிடையாது!


30 நிமிடங்கள் இலவசமாக வழங்கப்பட்ட வைபை


யில் போக்குவரத்தில், பயணியர் வருகையை அதிகரிப்பதற்கும் பயணிகளின் பொழுதுபோக்கு அம்சத்திற்கும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதையடுத்து, டிஜிட்டல் இந்தியா திட்டத்தில், நாடு முழுவதும், கூகுள்' நிறுவன உதவியுடன், ரயில் நிலையங்களில், இணையதள இணைப்புக்காக, இலவச வை - பை வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.
30 நிமிடங்கள் இலவசமாக வழங்கப்பட்ட வைபை
'லேப் - டாப்' மற்றும் மொபைல் போன்களில் இணையதள தொடர்பினால், இவ்வசதியை 30 நிமிடங்கள் இலவசமாக பயன்படுத்தி, 'இ - மெயில்' பார்க்கலாம், ரயில் போக்குவரத்து பற்றிய தகவல்களையும் அறிந்து கொள்ளலாம்.
பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு
இந்த சேவை பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மெயில் செக் செய்வதும், ரயில் ஸ்டேட்டஸ் செக் செய்வதற்கும் இந்த சேவை பெரிதளவு பயன்படுத்தப்பட்டது.
முதன்முதலில் மும்பை மத்திய ரயில் நிலையத்தில் அறிமுகம்
ரயில் நிலையத்தில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டு அடுத்த சில தினங்களில் கோடிக்கணக்கானோர் அதை பயன்படுத்தி பயண் அடைந்திருந்தனர். இந்த வைபை வசதியானது முதன்முதலில் மும்பை மத்திய ரயில் நிலையத்தில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டது.
ரயில்வே துறையுடன் சேர்ந்து கூகுள் நிறுவனம் இலவச வைபை
கடந்த 2015 முதல் இந்தியாவில் ரயில்நிலையங்களில், ரயில்வே துறையுடன் சேர்ந்து கூகுள் நிறுவனம் இலவச வைபை சேவைகளை வழங்கி வந்தது. வைஃபை நிறுவது, அதனை பராமரிப்பது உள்ளிட்டவைகளை கூகுள் நிறுவனம் கண்காணித்து வந்தது. சுமார் 400 ரயில்நிலையங்களில் படிப்படியாக கூகுள் நிறுவனம் வைஃடிப சேவைகளை நிறுவியது.
கூகுள் நிறுவனம் வழங்கிய வைபை சேவை நிறுத்தம்
இந்த நிலையில் கூகுள் நிறுவனம் தனது வைபை சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து கூகுள் நிறுவனம் blog-ல் எழுதியுள்ள அதன் துணைத் தலைவர் சீசர் குப்தா கூறுகையில், உலகிலேயே அதிகம் இணையம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா டாப் இடத்தில் இருக்கிறது என கூறினார். அதோடு, இந்தியாவில் குறைந்த விலையில் இணைய சேவை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தினசரி ஜிபி கணக்கில் இணைய பயன்பாடு
மேலும் மொபைல் போன் மூலம் எளிதில் தினசரி ஜிபி கணக்கில் இணையத்தை பயன்படுத்தும் முறை இந்தியாவில் பெரும்பாலானோர் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதன் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயணிகள் மத்தியில் அதிர்ச்சி
கூகுள் நிறுவனம் எடுத்துள்ள இந்த முடிவு ரயில் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் டாடா ட்ரஸ்ட் குரூப், பவர் கிரிட் கார்ப் நிறுவனங்கள் இலவச வைஃபை சேவையை தொடரும் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக