Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 21 மார்ச், 2020

10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து 3ஆவது மாடியிலிருந்து வீசி எரிந்த வாலிபர்!

சுரேஷ்
 சென்னை மதுரவாயில் பகுதியில் வடை கடை வைத்திருக்கும் ஒருவரின் 10 வயது சிறுமியை நள்ளிரவில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு 3ஆவது மாடியிலிருந்து தூக்கி எரிந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை
மதுரவாயில் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். அதே பகுதியில் வடை கடை நடத்தி வருகிறார். இந்த வருமானத்தை வைத்துத்தான் தனது குடும்பத்தை வழி நடத்தி வருகிறார். இவருக்கு 10 வயதில் மகள் ஒருவர் இருந்தார். இந்த சிறுமி அதே பகுதியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார்.

சீனிவாசன் மதுரவாயிலில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில், 3ஆவது மாடியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் வீட்டருகே சுரேஷ் என்ற இளைஞர் ஒருவரும் வசித்து வந்தார். சுரேஷ், சீனிவாசனின் 10 வயது மகளுடன் அவ்வப்போது விளையாடுவது என இருந்து வந்துள்ளார்.

பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அளித்திருந்ததைத் தொடர்ந்து சீனிவாசன் மகள் வீட்டிலிருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தன்னுடன் தூங்கிக் கொண்டிருந்த தனது குழந்தையை இரவு 12 மணியளவில் காணவில்லை.

அதிர்ச்சியடைந்த சீனிவாசன் குழந்தையை அந்த காம்பவுண்ட் முழுவதும் தேடியுள்ளார். அந்த நேரத்தில் பக்கத்து வீட்டில் வசித்து வந்த சுரேஷும் சீனிவாசனுடன் சேர்ந்து தேடி வந்துள்ளார்.

யதார்த்தமாகச் சீனிவாசன் அந்த குடியிருப்பு பகுதியின் கொள்ளை புறத்திற்குச் சென்று பார்த்தபோது, அங்கிருந்த தென்னை மரம் ஒன்றின் கீழ் ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்துள்ளார்.

தனது மகளை ரத்த வெள்ளத்தில் பார்த்த தந்தை, என்ன செய்வதெனத் தெரியாது, அவளைக் கட்டி அனைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். மருத்துவமனையில் சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி வரும் வழியிலே உயிரிழந்து விட்டதாகக் கூறினார்.

இதையடுத்து சீனிவாசன் தனது மகள் மரணம் குறித்து
மதுரவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு தொடர்பாக விசாரணை செய்ததில் சுரேஷ்தான் இதைச் செய்திருப்பார் எனச் சந்தேகித்து, அவரை காவல் துறையினர் கைது செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக