சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த
படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம்
சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கும் இந்த படத்தில் ரஜினியுடன், மீனா, குஷ்பு
கீர்த்தி சுரேஷ், , சூரி, பிரகாஷ் ராஜ், உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்,
டி இமான் இசை அமைக்கிறார்.
இதற்கு இடையில் நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ரஜினியை சந்தித்து கதை கூறியதாக கூறப்பட்டது. அந்த கதை ரஜினிக்கு பிடித்துவிட படத்தில் நடிக்க ஓகே சொல்லிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தது. எனவே அண்ணாத்த படத்தை முடித்த கையேடு ரஜினி ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என எதிர்பாக்கப்பட்டது.
ஆனால், தற்போது இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் கே.வி. ஆனந்த் படங்களில் நடிக்க ரஜினி முன்வந்துள்ளதாகவும் அந்த படங்களை நடித்து முடித்த பிறகே மூன்றாவது ஆளாக ராகவா லாரன்ஸ் படத்தில் நடிப்பார் என
பத்திரிக்கையாளர்
பிஸ்மி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து
அடுத்தடுத்து மூன்று முன்னணி இயக்குனர்களின் படங்களில் ரஜினி நடிக்கவிருப்பதால்
ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என நம்பலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக