Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 21 மார்ச், 2020

மோடி பேச்சு டாஸ்மாக்கும் மூடியாச்சு

 மோடி பேச்சு, டாஸ்மாக் கடையையும் மூடுறாங்க!

பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே சுய ஊரடங்கு உத்தரவைப் பின்பற்ற வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனாவால் இதுவரை 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பிலிருந்து ஒருவர் மீண்டுள்ளார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அந்த நபர் குணமடைந்து வீட்டிற்குச் சென்றுவிட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

இதற்கிடையே இரு தினங்களுக்குமுன் மக்களிடம் ஊடகத்தின் வாயிலாகப் பேசிய பிரதமர் மோடி, "மார்ச் 22ஆம் தேதியை மக்கள் சுய ஊரடங்கு நாளாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். மக்கள் தவிர்க்க முடியாத காரணங்களை விடுத்து, காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை வெளியே வராமல் வீட்டிலே இருக்கவும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் மோடி தனது உரையில், கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பொதுமக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளப் பின்பற்ற வேண்டி பல்வேறு வழிமுறைகள் குறித்து விவரித்தார். மோடியின் இந்த பேச்சைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊரடங்கு உத்தரவுக்கு ஏதுவாக பல்வேறு உத்தரவுகளைப் பிறபித்து வருகிறது.

மோடியின் வேண்டுகோளை நிறைவேற்றும் விதத்தில், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மளிகைக் கடைகள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்கள், நாளை நாள் முழுவதும் மூடப்பட்டிருக்கும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது.

அதேபோல், மாநிலம் முழுவதும் உள்ள ஹோட்டல்கள் அனைத்தும் நாளை மூடப்பட்டிருக்கும் என ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கமும் தெரிவித்துவிட்டது. கொரோனா மக்கள் ஊரடங்கைக் கருத்தில் கொண்டு ஞாயிற்றுக்கிழமை, சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டும் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிகிறது. மேலும் நாளைய தினம் காலை முதல் இரவு வரை அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் இயங்காது என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், மதுபானங்களை வாங்க வரும் குடிமக்களுக்கு நோய்த் தொற்று ஏற்படாமலிருக்க முன்னெச்சரிக்கையோடு விற்பனையைச் செய்து வந்த டாஸ்மாக் நிறுவனத்திற்கு நாளை ஒருநாள் விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மோடியின் கோரிக்கையை ஏற்றே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக