Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 21 மார்ச், 2020

’’சீனாவில் இனி கொரோனா இல்லை" - சீனா அரசு அறிவிப்பு!!

சீனாவில் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வூஹான் மாநிலத்திதான் முதன்முதலில் இந்த நோய் தொற்று உருவானதாக செய்திகள் வெளியான நிலையில், இந்த மாகாணத்தில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை என சீன அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியாவும் மெல்ல பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. நேற்று வரை 166 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 223  ஆக உயர்ந்துள்ளது.

இத்தாலியில், 3405 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சீனாவில் தற்போது 3245 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும்  அது கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயினில் சுமார் 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1002 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,இரானில் 1433 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 19,644 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சௌதி அரேபியாவில், 238 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதாகவும், எகிப்தில் 196 பேர் பாதிக்கப்பட்டு, 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும்  செய்திகள் வெளியாகிறது.
.
இந்நிலையில், சீனாவில் கடந்த 36 மணிநேரத்தில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை எனவும், கடந்த செவ்வாய் கிழமை அன்று மட்டும் ஒருவருக்கு புதிதாக கொரொனா பாதிப்பு ஏற்பட்டதாக சீன அரசு தெரிவித்திருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக