Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 31 மார்ச், 2020

2020 ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறும் என அறிவிப்பு


ஒலிம்பிக்கின் அமைப்பாளர்கள் இன்று நடத்திய ஆலோசனை கூட்டத்தில் 2020 டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கான தொடக்க விழாவை 2021 ஜூலை 23 ஆம் தேதி நடத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த போட்டிகள் ஜூலை 23 ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெறும் என செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தலால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டு தள்ளி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஜூலை மாதம் தொடங்கவிருந்த விளையாட்டுக்களை சர்வதேச ஒலிம்பிக் குழு கடந்த வாரம் ஒத்திவைத்தது. முன்னதாக திங்களன்று, ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் இந்த வார தொடக்கத்தில் புதிய தேதிகள் குறித்த முடிவு வரலாம் என்றார். அதன் அடிப்பையில் இன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்ட குழுவில் அடுத்த ஆண்டு ஒய்ம்பிக் போட்டிகள் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக, 

கொரோனா வைரஸ் தொற்று குறித்த வளர்ந்து வரும் கவலைகளுக்கு மத்தியில் விளையாட்டுக்களை ஒத்திவைப்பது குறித்து IOC தலைவர் தாமஸ் பாக் உடனான தொலைபேசி அழைப்பின் பின்னர் அபே செய்தியாளர்களிடம் பேசினார். இதன் போது இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின் போது அவர் தெரிவிக்கையில்., "விளையாட்டு வீரர்கள் சிறந்த நிலையில் விளையாடுவதை சாத்தியமாக்குவதற்கும், இந்த நிகழ்வை பார்வையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான ஒன்றாக மாற்றுவதற்கும் சுமார் ஒரு வருடம் ஒத்திவைப்பதை பரிசீலிக்குமாறு ஜனாதிபதி பாக் கேட்டுக் கொண்டோம்" என்று அபே கூறினார். மேலும் "ஜனாதிபதி பாக் 100 சதவிகித உடன்பாட்டில் இருப்பதாகவும்" அவர் தெரிவித்தார்.

டோக்கியோ வைரஸ் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியபோது அதற்கான தயாரிப்புகளை முடித்திருந்தது. பல மாதங்களாக விளையாட்டுக்கள் திட்டமிட்டபடி முன்னேற வேண்டும் என்று வலியுறுத்தினாலும், நிகழ்வுகள் முழுமையான வடிவத்தில் நடத்த முடியாவிட்டால் தாமதம் தவிர்க்க முடியாதது என்று அபே இந்த வாரம் முன்று குறிப்பிட்டிருந்தார்.

டோக்கியோ ஆளுநர் யூரிகோ கொய்கே தனித்தனியாக செய்தியாளர்களிடம் கூறுகையில், 2021 கோடையில் கூட்டப்படவுள்ள இந்த விளையாட்டு "டோக்கியோ 2020" என்றே அடையாளப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக