தற்போது வெளியாகி இருக்கும் திரௌபதி படத்தின் மூலம் மண்ணும்
பெண்ணும் எங்களுக்கு ஒன்னு தான் இதில் யார் கை வைத்தாலும் வெட்டுவோம் என்று இயக்குனர்
திரௌபதி படத்தின் மூலமாக கூறியிருக்கிறார்.
பெண்கள்
மீது தொடுக்கப்படும் போலி காதல் பிரச்சனைகளையும் தமிழக சினிமாவில் பேசுவது இல்லை என்ற
குற்றசாட்டு பல காலமாக இருந்து வந்த சூழலில் தமிழ் சினிமாவில் முதல் முறையாக இதுபோன்ற
மாற்றங்கள் வருவது வரவேற்கத்தக்கது.
எந்த
சாதிகளையும் ஏற்ற தாழ்வு அடிப்படையில் பார்க்காமல் தன் மண் சார்ந்த பெருமையை பேசுவதில்
தவறில்லை என்ற கருத்தை படம் பார்த்த ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில்,
இந்த படம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மோகன் ஜி, திரெளபதி என கடவுளின்
பெயரை வைத்ததால்தான் இப்படத்தின் மீது வன்மம் காட்டப்படுவதாக தெரிவித்துள்ளார்.
தான்
இயக்கும் அடுத்த படத்துக்கும் கடவுள் பெயரிலேயே தலைப்பு வைக்கப்போவதாக குறிப்பிட்டுள்ள
அவர், அந்த பெயர் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக