Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 10 மார்ச், 2020

ஏடிஎம்மில் குறைந்த அளவில் 100 ரூபாய் நோட்டுகள் வருகின்றனவா? காரணத்தை அறிக

 ஏடிஎம்மில் குறைந்த அளவில் 100 ரூபாய் நோட்டுகள் வருகின்றனவா? காரணத்தை அறிக
பொதுவாக 100 ரூபாய் நோட்டு (100 Rupee Note) எந்தவொரு பரிவர்த்தனைக்கும் எளிதானதாக இருக்கிறது. அதாவது சில்லறை போன்ற பிரச்சனைகள் இருக்காது. இந்த போன்ற காரணத்திற்காக, 100 ரூபாய் நோட்டுகளுக்கு நிறைய தேவை உள்ளது. அதனால் தான் ஏடிஎம்களில் (ATM) இருந்து 100 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் எடுக்கப்படுகின்றன. ஆனால் தற்போது, ​​இந்த நோட்டுக்கள் ஏடிஎம்மில் இருந்து குறைவாக வெளிவருகின்றன. இதன் காரணமாக மக்கள் நிறைய சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். 
ஏடிஎம்களில் இருந்து 100 ரூபாய் நோட்டுகள் (100 Rupee Note) ஏன் குறைவாக வெளிவருகின்றன என்று ஆச்சரியப்படுகிறீர்களா? இதற்கு காரணம் மத்திய அரசாங்கம் வங்கிகளுக்கு எந்தவொரு உத்தரவையும் வழங்கவில்லை அல்லது RBI தரப்பிலும் எந்த கட்டளையும் பிறப்பிக்கவில்லை. பிறகு ஏன் ATM-ல் குறைந்த அளவில் 100 ரூபாய் நோட்டுகள் வைக்கப்படுகின்றன என்ற கேள்வி எழும். அதற்கான காரணத்தை பார்ப்போம்.
உண்மையில், ஏடிஎம்மில் இருந்து 100 ரூபாய் நோட்டை (100 Rupee Note) திரும்பப் பெறுவதற்குப் பின்னால் நோட்டுகளின் அளவில் ஒரு பெரிய பிரச்சினை உள்ளது. புதிய நோட்டின் அளவு சிறியதாகவும், பழைய நோட்டின் அளவு பெரியதாகவும் இருப்பது தான் முக்கிய காரணமாகும். ஏடிஎம் ஆபரேட்டர்கள் இந்த நோட்டுக்களை வரிசையாக அமைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
இது தவிர, ஏடிஎம் ஆபரேட்டர்கள், இயந்திரத்தில் அனைத்து நோட்டுகளின் Cassette என்று பட்டியலிட வேண்டும். ஒரே நேரத்தில் இரண்டு விதமான அளவு கொண்ட நோட்டுகளை ஒரே Cassette-ல் வைக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. இந்த பட்டியலின் அடிப்படையில், ஏடிஎம் ஆபரேட்டர்கள் இயந்திரங்களில் நோட்டுகளை வைக்க வேன்கள் மூலம் ரொக்கம் அனுப்பப்படுகிறது. அதில் ஒரே அளவிலான நோட்டுக்கள் மட்டுமே அனுப்பப்படுவதால், குறைந்த அளவிலான 100 ரூபாய் நோட்டுகள் வைக்கப்படுகிறது. இதனால் தான் ஏடிஎம்களில் (ATM) 100 ரூபாய் நோட்டுகளின் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
ஆனால் உண்மை என்னவென்றால், வங்கிகளில் 100 ரூபாய் நோட்டு பற்றாக்குறை என்பது இல்லை. இதுக்குறித்து பேசிய வங்கியாளர்கள் மற்றும் ஏடிஎம் ஆபரேட்டர்கள், ATM இயந்திரங்களில் ரூ. 100 நோட்டுகளுக்கு தட்டுப்பாடு வராமல் இருக்க வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி பழைய நோட்டுகளை இயந்திரங்களில் வைப்பதை அனுமதிக்கக் கூடாது என்றார்கள். 
மேலும் இது நடந்தால், 100 ரூபாய் புதிய நோட்டுகளின் அளவிலான Cassette-களை நாடு முழுவதும் உள்ள ATM இயந்திரங்களில் பொருத்தப்பட்டு, அதன் பிறகு 100 ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு சிக்கலை போக்க முடியும் என்றார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக