Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 17 மார்ச், 2020

போலீஸ் துன்புறுத்துகிறது: இந்தியன் 2 விபத்து பற்றி கமல் நீதிமன்றத்தில் அவசர வழக்கு


Kamal Haasan
ந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கில் நடந்த விபத்து பற்றிய விசாரணையில் தன்னை போலீஸ் துன்புறுத்துகிறது என நடிகர் கமல் வழக்குதொடர்ந்துள்ளார்.
இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் சென்னை பூந்தமல்லி அருகில் உள்ள இவிபி ஸ்டூடியோவில் நடந்து வந்தபோது எதிர்பாராதவிதமாகி கிரேன் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

அதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பலி ஆகினர். கமல், ஷங்கர், காஜல் உள்ளிட்டவர்கள் நூலிழையில் உயிர் தப்பிய நிலையில், படக்குழுவினர் பலர் காயம். அடைத்தனர்.

இந்த விபத்து பற்றி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சில வாரங்கள் முன்பு இயக்குனர் ஷங்கர் மற்றும் கமல் ஆகியோரை நேரில் வரவைத்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் போலீசார் விசாரணை என்ற பெயரில் தன்னை துன்புறுத்துவதாக கமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்துள்ளார். விபத்து பற்றி மீண்டும் மீண்டும் நடித்து காட்ட சொல்வதாக தன் புகாரில் கமல் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த விபத்திற்கு பிறகு இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து நடக்காமல் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் காஜல் அகர்வால் மட்டும் பங்கேற்ற ஒரு பாடல் காட்சியின் ஷூட்டிங் ஷங்கரின் உதவியாளர்கள் மூலமாக படமாக்கப்பட்டது என தகவல் சில நாட்கள் முன்பு வந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக