Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 17 மார்ச், 2020

கொரோனா ஒரு மனிதர் உடம்பில் எவ்வளவு நாள் இருக்கும்? மருத்துவர்கள் புதிய தகவல்!

 Coronavirus
லகை அச்சுறுத்தி வரும் கொரோனா ஒருவரது உடலில் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்ற புதிய தகவலை சீன மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர்.

 சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா உலக நாடுகள் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ள நிலையில், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த கொரோனா ஒருவருக்கு பரவினால் எத்தனை நாள் நீடிக்கும் என்ற தகவலை சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஒருவரை கொரோனா பாதித்தால் 20 நாட்கள் கழித்துதான் அதன் அறிகுறிகள் தெரிய வரும். அதன்பிறகு அதிகபட்சமாக 37 நாட்கள் அது வீரியமாக இருக்கும் என கூறியுள்ளனர்.


கொரோனா அறிகுறிகள் தெரிய தொடங்கிய அடுத்த 20 நாட்களுக்கு கவனமாக இருக்க வேண்டும் எனவும் வைரஸால் பாதிக்கப்பட்டவர் அந்த பாதிப்பில் இருந்து மீண்ட பிறகு கொரோனா தாக்கம் சில நாட்கள் வரை நீடிக்கும் என்றும் சீன மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக