உலகம் முழுக்க கொரோனா வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகளில் பொதுமக்கள் வீட்டில் முடங்கி போய் உள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்குகிறது. உலகம் முழுக்க 22 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களை இந்த வைரஸ் பலிகொண்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதை அடுத்து 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியா, அமேரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா , பிரிட்டன் உள்ளிட்ட 20 நாடுகள் சேர்ந்த கூட்டமைப்பான ஜி-20 குழுமத்தின் சார்பாக மாநாடு நேற்று காணொளி மூலம் நடைபெற்றது. இதில் காணொளி மூலம் இந்திய பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
இந்த ஜி-20 மாநாட்டில் உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த 5 டிரில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 370 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படுவதாக முடிவுசெய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக