கொரோனா வைரஸின் தாக்கத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு
மேலும் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நாட்களில் மக்கள் வீட்டிலேயே தங்கியிருக்கும் படி கை கூப்பி கேட்டுக் கொண்டார். நாட்டின் வளர்ச்சியை விட மக்களின் உயிர் தான் முக்கியம் எனவும் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டுளார்
ஊரடங்கு உத்தரவு
ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்கள் வெளியே வரக் கூடாது என்பதில் காவல்துறையினர் உறுதியாக தெரிவித்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பொதுமக்களின் நலன் கருதியே இந்த செயலில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
எந்தெந்த கடைகள் திறக்க வேண்டும்
மேலும் எந்தெந்த கடைகள் திறக்க வேண்டும், எந்த காலவரையில் செயல்பட வேண்டும் என விதிகளும் விதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் எந்த கடை திறந்துள்ளது தேவையான பொருட்கள் கிடைக்குமா என்பது கூட அறியாமல் திணறி வருகின்றனர். அதேபோல் ஆன்லைன் விற்பனையும் முடக்கப்பட்டுள்ளது.
கூகுளில் பதிவிட்டுள்ள வியாபாரிகள்அதேபோல் கூகுளில் பதிவிட்டுள்ள வியாபாரிகள் தங்களின் ஆன்லைன் வியாபாரம் மட்டுமே முடக்கப்பட்டுள்ளது ஆப்லைன் வியாபாரங்கள் தொடர்ந்து செயல்படுகிறது என்பதை தெரிவிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதன்காரணமாக கடைகளை மூட வேண்டிய சூழல் நிலவி வருகிறது
கோவிட் 19 கொரோனா
இதையடுத்து கடந்த வாரம் கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை, கோவிட் 19 கொரோனா தொடர்பான அறிக்கையில் ஒரு சில விஷயங்களை குறிப்பிட்டிருந்தார். அதில் வணிகங்கள் இப்போது தற்காலிகமாக மூடப்பட்டதா இல்லையா என்பதை குறிக்க முடியும் என தெரிவித்தார்.
தற்காலிகமாக மூடியுள்ளதை குறிக்க முடியும்
அதன்படி வணிக உரிமையாளர்கள் தங்கள் இருப்பிடங்களை தற்காலிகமாக மூடியுள்ளதை குறிக்க முடியும். அதனுடன் செயல்படும் நேரத்தையும் குறிக்க முடியும். இதில் Google வரைபடம் மற்றும் தேடல் இரண்டும் வாடிக்கையாளர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட நிலையைக் காண்பிக்கும்.
ஆன்லைன் மட்டும் நிறுத்தப்பட்டு ஆப்லைன் விற்பனை செயல்படுகிறதா
அதேபோல் நிறுவனங்கள் அரசு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டின் காலத்தில் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதா அல்லது ஆன்லைன் மட்டும் நிறுத்தப்பட்டு ஆப்லைன் விற்பனை செயல்படுகிறதா என்பதை தெளிவாக காட்டமுடியும். அதோடு செயல்பாட்டு நேரத்தையும் இதில் குறிப்பிடமுடியும்.
வணிகர்கள் செயல்படுத்தும் முறையை கீழே காணலாம்
வணிகம் ‘தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது' (Temporarily Closed) எனக் குறிப்பதற்கு எந்த மாதிரியான நடைமுறைகள் பின்பற்ற வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
முதலில், இங்குள்ள இணைப்பைப் பயன்படுத்தி ‘கூகிள் தனது வணிகம்' (Google My Business) இல் உள்நுழைய வேண்டும்.
அதேபோல் இடது பக்கத்தில் உள்ள மெனு பட்டனில் தகவல் என்ற வார்த்தை இருக்கும் அதாவது info என ஆங்கிலத்தில் இருக்கும். அதை கிளிக் செய்து உள்ளே நுழைய வேண்டும். அந்த இடத்தில் கூகிளில் இந்த வணிகத்தை மூடு (Close this business on Google) என்ற பகுதிக்கு செல்ல வேண்டும்.
மூன்று தேவைகள் காண்பிக்கும்
இதற்குள் நுழைந்ததும் மூன்று தேவைகள் காண்பிக்கும் அதற்கேற்ப அதை பூர்த்தி செய்யலாம்.
அதில் தற்காலிகமாக மூடப்பட்டது (Mark as temporarily closed)
நிரந்தரமாக மூடப்பட்டது (Mark as permanently closed)
பட்டியலை அகற்று (Remove listing) என்ற வார்த்தை காண்பிக்கும். அதில் விருப்பப்பட்டவைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
இந்த முறையானது Google My Business-ல் பதிவிட்டு பட்டியிலிடப்பட்டுள்ள வணிக நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
வணிக நிறுவனங்களில் விற்பனை செயல்படுகிறதா அல்லது மூடப்பட்டுள்ளதா?
இந்த முறைகளின் மூலம் வாடிக்கையாளர்கள் மற்றும் பகுதி மக்கள் வணிக நிறுவனங்களில் விற்பனை செயல்படுகிறதா அல்லது மூடப்பட்டுள்ளதா என்பதை மக்கள் அறியமுடியும். கூகுளின் இந்த அறிமுகத்தின் மூலம் வணிகர்கள் வியாபாரத்தை எளிதாக செய்ய முடியும் அதேபோல் கொரோனா பரவாமல் தடுக்க பெரும் முயற்சியாகவும் இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக