ஒரு கிராமத்தில் மக்கள் எல்லாம் சேர்ந்து ஒரு புல்லட் பைக்கை கடவுளாக வணங்குகிறார்கள் என சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?உண்மையிலேயே ராஜஸ்தான் மாநிலத்தில் அப்படி ஒரு இடம் இருக்கிறது. அங்கு ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பழைய புல்லட் பைக்கை மக்கள் கடவுளாக வழி பட்டு வருகின்றனர்.
ஓம் சிங் ரத்தோர்
1991ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி ஓம் சிங் ரத்தோர் என்பவர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள பாலி மாவட்டத்தின் சோட்டிலா என்ற கிராமத்தின் வழியாக சென்று கொண்டிருந்தார். அவர் மிக வேகமாக சென்றால் அவரால் பைக்கை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் ரோட்டில் செல்லும்போதே நிலை தடுமாறினார்.
விபத்து
அடுத்து என்ன செய்ய வேண்டும் என அவர் யோசிப்பதற்குள் பைக் நேராக ஒரு மரத்தில் சென்று மோதியது. அதில் ஓம் சிங் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் ஓட்டி வந்த ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புல்லட் பைக் அங்கிருந்த கிணற்றடியில் விழுந்து கிடந்தது. அதன் பின் அங்கு வந்த போலீசார் ஓம் சிங்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அதிசயம்
ஓம் சிங் ஓட்டி வந்த பைக்கை போலீஸ் ஸ்டேஷனிற்கு கொண்டு சென்றனர். மறுநாள் அங்கு நடந்தது தான் பெரும் அதிசயம். மறுநாள் காலையில் போலீசார் போலீஸ் ஸ்டேஷனிற்கு வெளியே வந்து பார்த்த போது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஓம் சிங் விபத்தில் சிக்கிய பைக்கை காணவில்லை.
யார் காரணம்?
போலீசார் ஊருக்குள் சென்று விசாரிக்கலாம் என சென்றபோது விபத்து நடந்த அதே இடத்தில் குறிப்பிட்ட அந்த பைக் கிடந்தது. அதை பார்த்ததும் போலீசாருக்கு பெரும் ஆச்சரியம். அது எப்படி சாத்தியம் போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தப்பட்ட பைக் எப்படி சம்பவ இடத்திற்கு வந்தது என தெரியாமல் போலீசார் முழித்தனர். இருந்தாலும் அந்த கிராமத்தில் உள்ள சிலர் செய்தவேலையாக இருக்கும் என அவர்கள் கருதினர்.
பின்னர் அந்த பைக்கை மீண்டும் தாங்கள் இருக்கும் இடத்திற்கு கொண்டு வந்துவிட்டு பிறகு அந்த பைக்கில் இருந்த பெட்ரோலை முழுவதும் வெளியேற்றி விட்டனர். புல்லட் பைக் அதிக எடை கொண்டது என்பதால் அதை உருட்டிக்கொண்டே மீண்டும் செல்ல முடியாது. ?அதனால் போலீசார் அவ்வாறு செய்தனர்.
மறுநாளும் மறைந்தது
அப்படி இருந்தும் மறுநாளும் அங்கிருந்த பைக் காணாமல் போய்விட்டது. அதை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்துவிட்டனர். என்ன நடக்கிறது என தெரியாமல் போலீசார் முழித்தனர். மீண்டும் அந்த வண்டி விபத்து நடந்த இடத்திலேயே தான் கிடைக்கிறது. மீண்டும் எடுத்துக்கொண்டு வந்து போலீஸ் ஸ்டேஷனில் விடுகின்றனர். இந்த முறையும் காணாமல் போகிறது. விபத்து நடந்த இடத்தில் கிடைக்கிறது.
போலீசார் யாரோ வேண்டுமென்றே செய்யும் வேலை என நினைக்கின்றனர். பின் பைக்கை எடுத்து போலீஸ் ஸ்டேஷன் கொண்வு வந்து இந்த முறை சங்கிலியால் பைக்கை பூட்டிவிடுகின்றனர். ஆனால் இந்த முறையும் பூட்டுடன் காணாமல் போய் விபத்து நடத்த இடத்திலேயே கிடைக்கிறது.
வழிபாடு
இந்த செய்தி ஊரில் பலர் பலர் ஓம்சிங்கின் ஆவிதான் இந்த பைக்கில் இருக்கிறது என என் அந்த பைக்கை அங்கேயே வைத்து சிறிய கோவில் ஒன்றை கட்டி விடுகின்றனர். அன்று முதல் இன்றுவரை அந்த பைக் தான் அந்த கோவிலின் கடவுளாக இருந்து வருகிறது. அந்த பகுதி வழியாக யார் சென்றாலும் ஒரு நிமிடம் தங்கள் வாகனத்தை நிறுத்தி அந்த பைக்கை பார்த்து கும்பிட்டு விட்டு செல்கின்றனர்.
அப்படி அந்த பைக்கை குடும்பிடாமல் சொன்றவர்கள் பலர் விபத்தில் சிக்கியதாகவும் அந்த கிராம மக்கள் கூறுகின்றனர். இன்றும் ஒரு புல்லட் மக்கள் கடவுளாக வணங்கும் பழக்கம் மக்கள் மத்தியில் இருக்கிறது.
தீராத மர்மம்
போலீசார் போலீஸ் ஸ்டேஷனிற்கு கொண்டு வந்த பைக் எப்படி மீண்டும் விபத்து நடந்த இடத்திற்கே செல்கிறது? அந்த பைக்கை வழங்காணல் செல்பவர்கள் எப்படி விபத்தில் சிக்குகின்றனர்? எல்லாமே தீராத மர்மம் தான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக