டாக்டரான சேதுராமன் சந்தானத்தின் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்ததன் மூலம் சினிமா ரசிகர்களை கவர்ந்தார். அவரின் நடிப்பு மிகவும் எதார்த்தமாக இருந்ததால் ரசிகர்கள் அவரை கொண்டாடினார்கள். ஒரு சில படங்களில் நடித்த சேது நேற்று இரவு 8.45 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 36. மனைவியும், ஒரு வயது பெண் குழந்தையும் உள்ளனர். சேதுவின் மரண செய்தி அறிந்த திரையுலக பிரபலங்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
விக்ராந்த் சந்தோஷ்
சென்னையின் பிரபல மருத்துவர்களில் ஒருவராக இருந்தவர் சேதுராமன். 36 வயதில் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டார் என்கிற செய்தியை பிரபலங்களால் நம்பவே முடியவில்லை. அதற்குள் சென்றுவிட்டீர்களே சேது, இதயம் நொறுங்கிவிட்டது என்று நடிகர் விக்ராந்த் சந்தோஷ் ட்வீட் செய்துள்ளார்.
விஷ்ணு விஷால்
டாக்டர் சேதுவின் மரண செய்தியை பார்த்து மனமுடைந்துவிட்டேன். நல்ல மனிதர் அவர். வாழ்க்கையில் எதுவும் நடக்கலாம். அன்பு செலுத்துங்கள் என்று விஷ்ணு விஷால் ட்விட்டரில் தெரிவித்தார்
ஐஸ்வர்யா ராஜேஷ்
அதிர்ச்சியாக உள்ளது...அதற்குள் சென்றுவிட்டார்...அருமையான நபர்...சேதுவின் ஆத்மா சாந்தியடையட்டும் என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
சிபிராஜ்
டாக்டர் சேதுராமனின் மறைவு குறித்து அறிந்து அதிர்ச்சியில் உள்ளேன். நல்ல நண்பர், அருமையான மனிதர். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும் என்று சிபிராஜ் ட்வீட் செய்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக