Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 27 மார்ச், 2020

மருத்துவ பணி முடிந்து வீடு திரும்பியவர்களிடம் கருணை காட்டாத காவல் தெய்வங்கள்... கடமை உணர்வு மிகுந்து ரூ.500 அபராதம் வசூல்....


மதுரை மாநகரில்  கோரோனா வைரஸ் தொற்று தடுப்பு  மருத்துவப்பணிக்கு சென்று வீட்டிற்கு திரும்பிய அரசு மருத்துவமனை செவிலியர்கள் வந்த ஆட்டோவிற்கு  மதுரை மாட்டுத்தாவணி போக்குவரத்து காவலர்கள்  ரூ.500 அபராதம் விதித்தனர். அவர்கள் அடையாள அட்டைகளை காட்டியும் கொரோனா தடுப்பு பணிக்கு சென்ற அவர்களிடம் காவலர்கள்  கருணையில்லாமல் நடந்து கொண்டதாக  தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் தற்போது 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  மருத்துவப்பணி, காவல்பணி, ஊடகப்பணி ஆகிய பணிகளில் ஈடுபடுவோரை தவிர மற்றவர்கள் சாலைகளில் வாகனங்களில் வருவதற்கு காவல்துறையினரால்  தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மதுரை மாநகர காவலர்கள் கொரோனா மருத்துவப்பணிகளுக்கு செல்வோரை கூட சாலைகளில் செல்வதற்கு அனுமதிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக