Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 27 மார்ச், 2020

கொரோனா தொற்று எதிரொலி... சர்வதேச விமானங்கள் இந்தியாவில் இறங்க விதித்த தடையை மேலும் நீட்டித்த இந்திய அரசு...


இந்தியாவில் கொரோனோ வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ல சூழலில் வெளிநாடுகளில் இருந்து கொரோனோ தொற்று பரவாமல் தடுக்க இந்திய அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை விதித்து வருகிறது. இந்நிலையில், ஏற்கனவே  வெளிநாட்டு பயணிகள் இந்தியா வருவதையும், வெளிநாட்டு  விமானங்கள் இந்தியாவில் தரையிறங்குவதற்கும் மத்திய அரசு ஏற்கனவே தடை விதித்திருந்தது. 

இந்நிலையில், தற்போது அந்த தடையை ஏப்ரல் மாதம்  14ஆம் தேதி வரை வரை நீட்டித்துள்ளது. இது குறித்து விமான போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது, இந்தியாவில்  கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சர்வதேச விமானங்கள் இந்தியாவில் தரை இறங்குவதற்கு மத்திய அரசு ஏற்கனவே வரும் மார்ச் 29ம் தேதி வரை தடை விதித்து இருந்தது. 

இந்நிலையில் அந்த தடையை மேலும் நீட்டித்து வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த தடையானது சர்வதேச சரக்கு விமானங்களுக்கு பொருந்தாது என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக