Android Go Edition ஸ்மார்ட்போனான Nokia C2 அறிமுகமானது. இந்த புதிய நோக்கியா போனின் விலை மற்றும் அம்சங்களை பற்றி அறிய தொடர்ந்து படிக்கவும்.
கடந்த ஆண்டு டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட
நோக்கியா சி1 ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனின்
"வாரிசு" அறிமுகம் ஆகியுள்ளது. உங்கள் கணிப்பு சரியாக இருந்தால், ஆம் அது
நோக்கியா சி2 என்று அழைக்கப்படுகிறது.
இந்த புதிய நோக்கியா ஸ்மார்ட்போனின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து தற்போது வரையிலாக எந்த விதமான அதிகாரபூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும் இது இந்தியாவில் ரூ.5,499 என்கிற விலை நிர்ணயத்தை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த ஸ்மார்ட்போன் என்னென்ன நிறங்களில் வெளியாகும் மற்றும் என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும் என்பது போன்ற தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
நிச்சயமாக இந்திய சந்தையிலும் புதிய நோக்கியா சி2 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். புதிய நோக்கியா சி2 ஆனது சியான் மற்றும் பிளாக் வண்ணங்களில் வாங்க கிடைக்கும்.
அம்சங்களை பொறுத்தவரை, நோக்கியா சி2 ஆண்ட்ராய்டு கோ வெர்ஷன் ஆனது 5.7 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளேவுடன் 18: 9 என்கிற திரை விகிதத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 1.4GHz க்வாட் கோர் யுனிசாக் ப்ராசஸர் மற்றும் 1 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. தவிர மைக்ரோ எஸ்.டி கார்டு வழியாக 64 ஜிபி வரையிலான மெமரி நீடிப்பையும் இது வழங்குகிறது.
கேமராத்துறையை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் 5 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் பின்புற கேமரா உள்ளது. இது எல்இடி ஃபிளாஷ் மற்றும் எஃப் / 2.2 அபெர்க்ஷரை கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, இதில் ஒரு 5 மெகாபிக்சல் அளவிலான செல்பீ கேமரா உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தின் கீழ் இயங்குகிறது, மற்றும் இது ஆண்ட்ராய்டு கோ பதிப்பின் கீழ் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 2800 எம்ஏஎச் நீக்கக்கூடிய பேட்டரி உள்ளது. இணைப்பு ஆதரவுகளை பொறுத்தவரை இது 4 ஜி, ப்ளூடூத் 4.2 வைஃபை 802.11 பி / ஜி / என், ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் ஆகியகளை கொண்டுள்ளது
இந்த ஸ்மார்ட்போனை 3.5 மிமீ ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ மற்றும் பிரத்யேக கூகுள் அசிஸ்டென்ட் பட்டனும் உள்ளது. இந்த புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் ஆனது அளவீட்டில் 154.8 x 75.59 x 8.85 மிமீ மற்றும் 161 கிராம் எடையும் கொண்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக