சியோமி
நிறுவனம் நாளை (மார்ச் 12) தனது ரெட்மி நோட் 9 மற்றும் ரெட்மி நோட் 9ப்ரோ மாடல்களை
இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்
மாடல்கள் சற்று வித்தயசமான வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிகளுடன் வெளிவரும்.
ரெட்மி நோட் 9
மற்றும் ரெட்மி நோட் 9ப்ரோ
மேலும்
இந்த ரெட்மி நோட் 9 மற்றும் ரெட்மி நோட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து ரெட்மி
நோட் 9ப்ரோ மேக்ஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலும் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல்கள்
வெளிவந்த வண்ணம் உள்ளது.
ஆண்ட்ராய்டு 10
வெளிவந்த தகவலின் அடிப்படையில் ரெட்மி
நோட் 9சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் மீடியாடெக்கின் டைமன்சிட்டி 800 எஸ்ஒசி சிப்செட்
வசதி இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளங்களை
அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன்கள் வெளிவரும் எனக் கூறப்படுகிறது. ஆனால்
ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸின் வடிவமைப்பு அல்லது அம்சங்கள் குறித்து நம்பகமான லீக்ஸ்
தகவல் எதவும் வெளியாகவில்லை.
ஹை ரெஃப்ரெஷ் கொண்ட டிஸ்பிளே
ரெட்மி நோட் 9 மற்றும் 9 ப்ரோ
ஸ்மார்ட்போன்கள் குவாட் ரியர் கேமரா அமைப்புகளுடன் வெளிவரும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஹை ரெஃப்ரெஷ் கொண்ட டிஸ்பிளேக்கள் மற்றும் சிறந்த
பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30W பாஸ்ட் சார்ஜிங்
ரெட்மி நோட் 9ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது
(யு.எஸ். எஃப்.சி.சி பட்டியலின்படி) 30W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும்
எனவும், பின்பு வெள்ளை, கருப்பு போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல்
வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டள்ளது.
64ஜிபி/128ஜிபி மெமரி
மேலும் இந்த ரெட்மி நோட் 9ப்ரோ
ஸ்மார்ட்போனில் இரண்டு மெமரி மற்றும் ஸ்டோரேஜ் உள்ளமைவுகளில் அறிமுகம் ஆகும்
என்றும், அதன்படி 64ஜிபி/128ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி/6ஜிபி ரேம் வசதிகளுடன்
வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4500எம்ஏஎச் பேட்டரி
குறிப்பாக ரெட்மி நோட் 9ப்ரோ
ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி வசதியும், ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனில்
4000எம்ஏஎச் பேட்டரி வசதியும் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் வைஃபை,
ஜிபிஎஸ், உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மாரட்போன்கள் வெளிவரும்.
NavIC சிஸ்டம்
வெளிவரும் புதிய ரெட்மி
ஸ்மார்ட்போன்களில் இஸ்ரோ அமைப்பின் NavIC சிஸ்டம் உள்ளது, எனவே இது ஜிபிஎஸ்-ஐ விட
சிறப்பாக செயல்படும் எனக் கூறப்படுகிறது. பின்பு இந்த புதிய ஸ்மார்ட்போன்களின்
வடிவமைப்புக்க அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக