ஒப்போ நிறுவனம் இந்தியாவில் அருமையான
ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, குறிப்பாக இந்நிறுவனத்தின்
ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றதான் கூறவேண்டும்.
மேலும் அன்மையில் இந்நிறுவனம்
அறிமுகம் செய்த ஃபைண்ட் எக்ஸ்2 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அதிக வரவேற்பை பெற்றுள்ளது,
பின்பு இந்நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலும் அன்மையில் அறிமுகம்
செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் ஸ்மார்ட் டிவி
குறிப்பாக இந்தியாவில் ஒப்போ என்கோ
ஃபிரீ டி.டபுள்யூ.எஸ். இயர்பட்ஸ்-ஐ அன்மையில் அறிமுகம் செய்தது ஒப்போ நிறுவனம்,
அந்த வரிசையில் ஒப்போ பிராண்டின் முதல் ஸ்மார்ட் டிவி மாடல் விரைவில் அறிமுகம்
செய்யப்பட இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம்
அதன்படி இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்
டிவி பற்றி இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், இது 2020 ஆண்டின்
இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஏற்கனவே சியோமி,
ஒன்பிளஸ்,மோட்டோரோலா மற்றும் நோக்கியா போன்ற நிறுவனங்கள் ஸ்மார்ட் டிவிகளை
அறிமுகம் செய்து விற்பனை
செய்துவருகிறது, இந்தநிலையில் ஒப்போ நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி வெளிவந்தால் மேலே
குறிப்பிட்டுள்ள இந்த நிறுவனங்களுக்கு போட்டியாக அமையும்.
மேலும் சியோமி நிறுவனம் விரைவில்
அதிநவீன ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, எனவே இந்த ஒப்போ
டிவி மாடலும் வெளிவந்தால் சரியான போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம்
புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் செட்
டாப் பாக்ஸ் இணைப்பு மட்டுமின்றி ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்தி இணையத்தில்
பிரவுஸ் செய்ய ஆதரவு கொடுக்கிறது. மேலும் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், உள்ளிட்ட
பல்வேறு சேவைகளை இயக்க உதவுகிறது, மேலும் ஸ்மார்ட் டிவியில் கூகுள் அசிஸ்டண்ட்
வசதி வழங்கப்பட்டு இருப்பதால், இவற்றை குரல் வழியே இயக்கவும் முடியும் என்பது
குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக