சிறந்த இணைப்பிற்காக இன்ட்ரா-வட்டம் ரோமிங்கைத் தொடங்க டெலிகாம் ஆபரேட்டர்களுக்கு ஏர்டெல் வலியுறுத்தியுள்ளது. தடையற்ற இணைப்பை உறுதி செய்வதற்காக, வோடபோன் ஐடியா , ரிலையன்ஸ் ஜியோ, பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் போன்ற பல்வேறு தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களை இன்டர்-வட்டம் ரோமிங்கை செயல்படுத்துமாறு பாரதி ஏர்டெல் வலியுறுத்தியுள்ளது.
அரசாங்கத்திடம் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்தது என்ன?
இந்த செய்தியை ET டெலிகாம் வெளியிட்டுள்ளது. இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால் நிச்சயம் நெட்வொர்க் பயன்பாட்டில் அழுத்தம் ஏற்படும் என்று அரசாங்கத்திடம் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்து, இந்த புதிய முறையை நடைமுறைப் படுத்த கூறியுள்ளது. இந்த பரிந்துரை முழு தேசத்திற்கும் பயனளிக்கும் என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அனைத்து டெலிகாம் நிறுவனங்களுக்கும் ஏர்டெல் வலியுறுத்தியுள்ளது
உள்-வட்ட ரோமிங் தொடர்ச்சியான சேவைகளை உறுதி செய்யும் பாரதி ஏர்டெல் தனது கடிதத்தில் ட்ராய், தொலைத் தொடர்புத் துறை மற்றும் பிற டெல்கோக்களை சேர்த்து உரையாற்றியதுடன், முழு தேசமும் ஊரடங்கின் கீழ் இருக்கும் நேரத்தில், இந்த உள்-வட்ட ரோமிங் சேவை தடையற்ற இணைப்பிற்கு வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளது. இதனால் வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்கும் இது பெரிதாய் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிக்கல் இல்லாத நெட்வொர்க்கிங் தேவை
மேலும், ஒரு தளம் மூடப்பட்டிருக்கும் அல்லது தொலைதொடர்பு சேவை வழங்குநருக்கும், பயனர்களுக்கும் சேவையை வழங்க முடியாத சூழ்நிலையில், இந்த உள்-வட்ட ரோமிங் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல், DoT ஆல் வழங்கப்பட்ட நிலையான இயக்க நடைமுறைகளுக்கு (SOP-17) ஏற்ப முன்னேற்றங்கள் செய்யப்படும் என்றும் பாரதி ஏர்டெல் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சி.இ.ஓ. ரன்தீப் சேகோன் தெரிவித்தது
சீரான சேவை மற்றும் தொந்தரவில்லாத செயல்பாட்டிற்காக டெல்கோ நிறுவனம் தனது அரசு மற்றும் நிறுவன வாடிக்கையாளர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக பாரதி ஏர்டெல்லின் சி.இ.ஓ. ரன்தீப் சேகோன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த இன்ட்ரா-வட்டம் ரோமிங் வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றும், இந்த காலகட்டத்தில் இதை கருத்தில் கொள்ளவேண்டியது முக்கியம் என்றும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.
புதிய சந்தாதாரர்களைச் சேர்ப்பதில் டெல்கோ மந்தம்
கொரோனா வைரஸின் தாக்கத்தினால் மக்களை வீட்டிலேயே மூடிவிட்டு சமூகக் கூட்டங்களைத் தவிர்க்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளது. இதனால் புதிய சந்தாதாரர்களைச் சேர்ப்பதில் டெல்கோ நிறுவனங்கள் மந்தமாகிவிட்டது இதன் விளைவாக, தொலைத் தொடர்புத் துறையும் மந்தமடையும் நிலை உருவாகியுள்ளது. அறிக்கையின்படி, கடைகள் காலியாக உள்ளன, மேலும் மக்கள் புதிய சிம் கார்டுகளைத் தேர்வு செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
2 மில்லியன் இழப்பு
தொலைத் தொடர்பு ஆபரேட்டர்கள் மாதத்திற்கு 3 மில்லியன் புதிய சந்தாதாரர்களைச் சேர்க்கிறார்கள். கொரோனாவின் தாக்கத்திற்குப் பின்னால் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் மார்ச் மாதத்தில் வெறும் 1 மில்லியன் சந்தாதாரர்களை மட்டுமே சேக்கும் என்று தெரிகிறது. இதனால் 2 மில்லியன் இழப்பு ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக