Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 25 மார்ச், 2020

24 மணி நேரத்திற்கு பிறகும் பிரியமானவர்களின் ஸ்டேட்டஸ் பார்ப்பது எப்படி?

மிகப்பெரிய பிரபலமடைந்த மெசேஜ்ஜிங் தளங்களில் ஒன்றான வாட்ஸ்அப் பயன்பாடு உலக மக்கள் அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டில் வாட்ஸ்அப் அதன் ஸ்டேட்டஸ் அம்சத்தை அறிமுகப்படுத்தியது, இந்த ஸ்டேட்டஸ்கள் 24 மணி நேரத்திற்கு பின் தானாக அழிந்துவிடும். அப்படி நீங்கள் பார்க்க தவரிய உங்கள் விருப்பமானவர்களின் ஸ்டேட்டஸை 24 மணி நேரத்திற்கு பிறகும் பார்ப்பதற்கு ஒரு வழி உள்ளது.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்

முதலில் இந்த அம்சம் வெளியிடப்பட்ட போது சில எதிர்ப்பை சந்தித்த போதிலும், இது விரைவில் அனைவரிடமும் பிரபலமடைந்தது. இப்போது, இந்த அம்சம் இல்லாமல் பெரும்பாலான பயனர்கள் இருக்க முடியாதென்ற அளவிற்கு மாறிப்போனது. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பயனர்கள் டெக்ஸ்ட், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர இந்த அம்சம் அனுமதிக்கிறது

24 மணி நேரம் மட்டுமே காணமுடியும்

இதில் பகிரப்படும் அனைத்து ஸ்டேட்டஸ்களுக்கும் சரியாக 24 மணி நேரம் மட்டுமே கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்திற்குப் பிறகு தானாகப் பயனர்கள் பதிவிட்ட ஸ்டேட்டஸ்கள் மறைந்துவிடும், அதேபோல் உங்கள் ஸ்டேட்டஸை உங்கள் காண்டாக்ட்டில் உள்ளவர்களில் யாரெல்லாம் பார்வையிட்டார்கள் என்ற தகவலும் இந்த அம்சத்தில் உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.

 24 மணி நேரத்திற்கு பின்பும் பார்க்க வாய்ப்புள்ளது

ஆனால், நம்முடைய பிஸியான நாட்களில் அனைவரின் ஸ்டேட்டஸ் மற்றும் உங்களுக்கு பிடித்தமான ஸ்டேட்டஸை 24 மணி நேரத்திற்குப் பின் நீங்கள் பார்க்க நினைத்தால் அதற்கும் ஒரு வழி உள்ளது, அதை சில எளிய முறைப்படி நீங்கள் மீண்டும் 24 மணி நேரத்திற்கு பின்பும் பார்க்க வாய்ப்புள்ளது. அதை எப்படிச் செய்வதென்று பார்க்கலாம்.

செயல்முறை 1

  • உங்கள் ஸ்மார்ட்போனில் முதலில் கூகிள் பிளே ஸ்டோர் ஓபன் செய்துகொள்ளுங்கள்.
  • அடுத்தபடியாக கூகிள் ஃபைல்ஸ் அல்லது வேறு ஏதேனும் ஃபைல் மேனேஜர் பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
  • ஃபைல் மேனேஜர் பயன்பாட்டை ஓபன் செய்து இன்டெர்னல் ஸ்டோரேஜ் கிளிக் செய்யுங்கள். 
  • இப்பொழுது வாட்டஸ்அப் ஃபோல்டரை கிளிக் செய்யுங்கள்.
  • பின் மீடியா ஃபோல்டரை கிளிக் செய்யுங்கள்.
  • இப்போது உங்களுக்கு ஸ்டேட்டஸ் (Statuses) என்ற ஃபோல்டரை கிளிக் செய்யுங்கள்அவ்வளவு தான் இனி இந்த ஃபோல்டரை உள் சென்று நீங்கள் பார்வையிட்ட அனைத்து ஸ்டேட்டஸ்களையும் பார்வையிட்டுக்கொள்ளலாம். 
  • அங்கிருந்து அந்த ஸ்டேட்டஸ்களை நீங்கள் வேறு ஃபோல்டர்களுக்கு இடம் மாற்றி அதை சேவ் செய்தும் கொள்ளலாம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். இந்த முறையைப் பயன்படுத்தி நீங்கள் 24 மணி நேரத்திற்கு பிறகும் ஸ்டேட்டஸை பார்வையிடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக