Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 25 மார்ச், 2020

ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய பெஞ்ச்மார்க்கிங் மதிப்பெண் இது தான்!



ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 8 , ஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 8 லைட் ஆகிய மூன்று புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் ஏப்ரல் 15ம் தேதி அறிமுகமாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த புதிய ஸ்மார்ட்போனின் பெஞ்ச்மார்க் விபரங்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

ஒன்பிளஸ் 8 சீரிஸ் லீக்

மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் 2019ம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒன்பிளஸ் 7 சீரிஸின் வெற்றியைத் தொடர்ந்து ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஒன்பிளஸ்8 ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள், ரெண்டர்கள் மற்றும் பல உள்ளடக்கிய தகவல்களை சமீபத்திய காலங்களில் ஏராளமான லீக்குகளாக வெளியாகிக்கொண்டே தான் இருந்துவந்தது.

பெஞ்ச்மார்க் மதிப்பெண்

அந்தவரிசையில் இப்போது, ​​ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன், டெஸ்க்டாப் சிபியுக்களின் AI செயல்திறன் மற்றும் மொபைல் புள்ளிவிவரங்களைக் கண்காணிக்கும் தளமான AI பெஞ்ச்மார்க்கில் தனது செயல்திறனைச் சோதனை செய்துள்ளது. இந்த பட்டியலில் ஒன்ப்ளஸ் 8 ப்ரோ ஸ்னாப்டிராகன் 865 SoC மற்றும் 12 ஜிபி ரேம் உடன் பட்டியலிடப்பட்டுள்ளது. இது எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் 8 ப்ரோவிற்கு கிடைத்த மதிப்பெண் எவ்வளவு தெரியுமா?

இந்த பெஞ்ச்மார்க் AI மதிப்பெண்ணில் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் 33,480 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்த மதிப்பெண்ணுடன் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் லீடர்போர்டில் 22வது இடத்தை பிடித்துள்ளது. ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் உடன் வெளியான சாம்சங் கேலக்ஸி எஸ் 20, ஷியோமி மி 10 போன்ற போன்களின் மதிப்பெண்ணை மிஞ்சவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

பட்டியலில் முதலில் உள்ள போன் இதுதான்

யாரும் எதிர்பார்த்திடாத சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அதே ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் உடன் இருக்கக் கூடிய ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன் 38,638 புள்ளிகளைப் பெற்று முன்னிலையில் உள்ளது. இந்த பெஞ்ச்மார்க் பட்டியலில் ஹுவாய் நிறுவனத்தின் கிரின் 990 சிப்செட் கொண்ட ஸ்மார்ட்பஹோனே 76,000 மதிப்பெண்களைப் பெற்று பெஞ்ச்மார்க் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இதுவாக இருக்குமோ?

இது ஒன்பிளஸ் 8 ப்ரோவின் மதிப்பெண்ணை விடப் பாதிக்குப் பாதி அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்த கணிசமான குறைந்த மதிப்பெண்களுக்கு, ஒன்பஸ் 8 ப்ரோவின் இயங்குதளம் இன்னும் முழுமையாக மேம்படுத்தப்படாத ஆரம்ப-மேம்பாட்டு மென்பொருள் பதிப்பை இயக்கி இருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது

வருத்தத்தில் உள்ள ரசிகர்கள்

ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்த AI பெஞ்ச்மார்க்கிங் மதிப்பெண்கள் ஒன்பிளஸ் ரசிகர்களைச் சற்று வருத்தமடையச் செய்துள்ளது என்பதே உண்மை. ஒன்பிளஸ் 8 சீரிஸ் வாங்கலாம் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த மதிப்பெண் அவர்களைச் சற்று சிந்திக்கவைத்துள்ளது. எப்படியும் இதன் விலை குறைவாக இருக்கப்போவதில்லை என்ற கணிப்பும் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக