Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 13 மார்ச், 2020

இந்த விஷயத்துக்காக கூட்டு சேர்ந்த பிஎஸ்என்எல் & எஸ்பிஐ; இனி ஆபிஸூக்கு போக வேண்டாம்!

ரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு சேவை வழங்குநரான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்), நாடு முழுவதும் உள்ள அனைத்து சேனல் பார்ட்னர்களுக்கும் ‘பாரத் இன்ஸ்டாபே’ எனும் டிஜிட்டல் கட்டண சேவையை இன்று அறிவித்துள்ளது.

பாரத் இன்ஸ்டாபே (Bharat InstaPay) எனும் இந்த புதிய சேவையானது எஸ்பிஐ (SBI) மூலம் இயக்கப்படுகிறது என்பதையும், மேலும் இது அனைத்து வகையான சேனல் பார்ட்னர்களுக்கும் 24x7 அடிப்படையில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த உதவும் என்பதையும் பிஎஸ்என்எல் உறுதிப்படுத்தியுள்ளது.

பிஎஸ்என்எல்-ன் ஐடி தளமானது எஸ்பிஐ வங்கி தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் டிஜிட்டல் பேமண்ட்களை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு பிஎஸ்என்எல் சேனல் பார்ட்னர்களும் டிஜிட்டல் ஐடி வழங்கப்படும்.

அது பிஎஸ்என்எல்-ன் சேனல் கூட்டாளர்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்ய உதவும், அதாவது எந்தவொரு நாளின் எந்வொரு நேரத்திலும் எந்த விதமான காகித வேலைகளும் இல்லமால் பிஎஸ்என்எல் அலுவலகங்களுக்கு செல்லாமல் பரிவர்த்தனைகளை செய்ய உதவும்.

அதாவது பிஎஸ்என்எல் பாரத் இன்ஸ்டாபேவிற்கும் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கும் எந்த தொடர்பும் இருக்காது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக