>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 13 மார்ச், 2020

    கொரோனா எதிரொலி: பொது போக்குவரத்து வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு

    லகளவில் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ள கொரோனா வைரஸின் கோர தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டனர். உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸை கொள்ளை நோயாக அறிவித்துள்ளது.

    பெருவாரியாக பரவும் தன்மை கொண்ட, உயிருக்கே அச்சுறுத்தலாக அமையக்கூடிய நோய் என்பதே கொள்ளை நோய் என்பதற்கான அர்த்தம். சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் தாக்குதலுக்கு நான்காயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

    உலக சுகாதார அமைப்பின் இந்த அறிவிப்பை அடுத்து, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

    இதுதொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, அனைத்து பொது போக்குவரத்து ஊர்திகளிலும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான போஸ்டர்கள் ஒட்டப்பட வேண்டும். அனைத்து பேருந்து முனையங்களும் சுத்தம் செய்யப்பட வேண்டும். பொது போக்குவரத்து வாகனங்கள், முனையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களிலும் சுகாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் உத்தரவுப் படி, பேருந்துகள் மட்டுமில்லாமல் மக்கள் அதிகம் பயன்படுத்தும் அனைத்து விதமான பொது போக்குவரத்து ஊர்திகளிலும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதுதொடர்பான டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அனைத்து மெட்ரோ ரயில்களும், பயணிகள் ஏறுவதற்கு முன்னதாக சுத்தப்படுத்தப்படுகிறது. இந்த நடவடிக்கை தினமும் மேற்கொள்ளப்படுகிறது என டி.எம்.ஆர்.சி கூறியுள்ளது.

    இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தேவையான உதவிகளை செய்யுமாறு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இந்த வைரஸ் மேலும் பரவுவதை தடுப்பதற்கு ஒருமுகப்படுத்தப்பட்ட பொது சுகாதார நிலைமையை கையாள வேண்டும் அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக