Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 25 மார்ச், 2020

சுற்றி திரிந்த இளசுகள், மடக்கி பிடித்த போலீஸ் கொடுத்த நூதன தண்டனை!!

ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லமால் வெளியே சுற்றிய இளைஞர்களை போலீஸ் ஒருவர் தோப்புகரனம் போட வைத்துள்ளார். 
 
கொரோனா பரவல் இந்தியாவில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 562 ஆக அதிகரித்துள்ளது. எனவே நாடு முழுவது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு ஊரடங்கு உத்தரவை போட்டால் மக்கள் இதன் அவசியத்தை உணராமல் வெளியே சென்று வருகின்ரனர். இப்படித்தான் விழுப்புரத்தில் தேவையில்லாமல் வெளியே சுற்றி திரிந்த இளைஞர் சிலரை மடக்கி பிடித்த காவலர் அவர்களை தண்டிக்கும் விதமாக தோப்புகரனம் போட வைத்துள்ளார். 
 
இதேபோல, மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திர, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தடையை மீறி வாகனம் ஓட்டி வந்தவர்களை போலீஸார் நிற்க வைத்து அடித்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். சில பகுதிகளில் வாகனங்களின் காற்றை பிடுங்கியும், ரோட்டில் தோப்புக்கரனம் போட வைத்தும் தண்டனைகளை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக