தென்னிந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனராக உருவாகியுள்ள ராஜமௌலி பாகுபலி படத்துக்குப் பிறகு ராம் சரண் மற்றும் நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் என்ற வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார். மேலும் பாலிவுட் நடிகை ஆலியா பட் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கின்றார்.
இந்நிலையில் கொரோனாவால் நாடே முடங்கியிருக்கும் இச்சமயத்தில் மக்களின் சோகமான மனநிலையை போக்க உதவியாக இருக்கும் என கருதி RRR படகுவினர் இன்று இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
தெலுங்கு, தமிழ் , இந்தி, கன்னடம் , மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளிவரும் இப்படத்தை காண உலகம் முழுவதும் உள்ள ராஜமௌலியின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த மோஷன் போஸ்டர் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக