நெல்லை மாநகர் பகுதியில் நெடுஞ்சாலைகளில்
விபத்து ஏற்பட்டது போன்று சித்தரித்து உதவிக்கு வருபவர்களை அடித்து அவர்களிடம் இருந்து
இருசக்கர வாகனங்கள், பணத்தை பறித்துச் செல்லும் 5 பேரை பாளையங்கோட்டை போலீசார் கைது
செய்தனர் . .இவர்களிடம் இருந்து 4 இருசக்கர வாகனங்கள் , 16 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறிமுதல்
செய்துள்ளனர் .
நெல்லை மாநகர் மற்றும் அதை சுற்றியுள்ள நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்பட்டது போன்று நடித்து, இருசக்கர வாகனங்களில் வருபவர்களை அடித்து இருசக்கர வாகனங்கள் மற்றும் அவர்களிடம் இருந்து பணத்தை பறிப்பது தொடர்ந்து நடந்து வந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர் .
இதனையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு தாழையூத்து முதல் பொன்னாக்குடி வரை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர் .
அப்போது நான்கு வழிச்சாலையில் சந்கேத்திற்கு இடமளிக்கும் வகையில் அதிவேகமாக வந்த 6 இளைஞர்களை போலீசார் மடிக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுவதுபோன்று நடித்து இருசக்கர வாகனங்கள் பணத்தை பறித்தது தெரியவந்தது.
இதனையடுத்து நெல்லை பகுதியைச் சேர்ந்த முத்துவேல், ஹரிஹரன், மணிகண்டன், சங்கரநாராயணன், மாரிசக்தி, ஆகிய 5 பேரையும் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர் . அவர்களிடம் இருந்து 4 இருசக்கர வாகனங்கள் , மற்றும் 16 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்துள்ளனர் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக