Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 6 மார்ச், 2020

பிட்காய்ன்களைப் பயன்படுத்துவதில் சிக்கல் வருமா? உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்ன?

பரிவர்த்தனைகள் மேற்கொள்ளக்கூடாது
டந்த இரண்டு ஆண்டுகளாக பிட்காய்ன் என்ற இந்த வார்த்தையை நாம் அதிகம் பயன்டுத்தவில்லை என்றே தான் கூறவேண்டும், குறிப்பாக இரண்டு வருடங்களுக்கு முன்பு பிட்காய்ன்கள் தொடங்கியபோது, அப்தே முட்டுகட்டை போட்டுவிட்டது ரிசர்வ் பேங்க்.
பரிவர்த்தனைகள் மேற்கொள்ளக்கூடாது
குறிப்பாக பிட்காய்ன் கொண்டு பரிவர்த்தனைகள் மேற்கொள்ளக்கூடாது எனவும வங்கிகளுக்கும் அறிவுறுத்தியும் மக்களும் பிட்காய்ன் வணிகத்தில் ஈடுபடக் கூடாது எனவும் கூறியதால் அதன் பின்னர் பிட்காய்ன் தொடர்பான விவாதங்களும் பெரிதாக நடைபெறவில்லை.
உச்சநீதி மன்னறம்
மேலும் பிட்காய்ன் தொடர்பான இதுவரை எந்தவொரு சட்டமும் கொண்டுவரப்படவில்லை, இந்நிலையில் அதற்கு மீண்டும் உயிர் கொடுத்திருக்கிறது உச்ச நீதி மன்னறம். அதாவது கிர்ப்டோகரன்சி தொடர்பான எந்தவொரு சட்டமும் இந்தியாவில் இல்லாத நிலையில், அதை ரிசர்வ் வங்கியால் தடைசெய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது
ரிசர்வ் வங்கி
பின்பு க்ரிப்டோகரன்சி மேல் ரிசர்வ் வங்கி விதித்திருத்த தடையும் கடந்த மார்ச் 4-ம்தேதி நீக்கியுள்ளது. அதாவது நிஜ உலகில் புழங்க முடியாத, டிஜிட்டலாக மட்டுமே உள்ள கரன்சிக்குத்தான் கிர்ப்டோகரன்சி எனப் பெயர். இதில் நமக்கு பரீட்சையமானவை தான் இந்த பிட்காய்ன்கள்.
உலகம் முழுவதும் உள்ளன
ஆனால் எத்திரியம் (Ethereum), ரிப்பில்(Ripple), லைட்காய்ன் (Litecoin) எனப் பல வகையான கிரிப்டோகரன்சிகள் உலகம் முழுவதும் உள்ளன. உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு இவையனைத்திற்கும் பொதுவானதே ஆகும். மேலும் கடந்த ஆண்டு கிரிப்டோகரன்சிகளைப் பற்றிய வரைவு தயரிக்க உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது, அந்ந குழு அறிக்கையின்படி க்ரிப்படோகரன்சிகள் தடை செய்யப்பட வேண்டும் எனவும். மீறி க்ரிப்டோகரன்சிகளைப் பயன்படுத்துபவர்கள் கடுமையான தண்டைனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் ஒரு வரைவைத் தயார்செய்து கொடுத்தது.

அதன்படி இந்தியாவில் க்ரிப்டோகரன்சியை மைனிங் செய்யவோ பயன்படுத்தவோ கூடாது. மீறினால், ஐந்திலிருந்து 10 வருடம் வரை சிறைத்தண்டனையும் 25 கோடி வரை அபராதமும் விதிக்க வேண்டும் என அந்ந வரைவில் கூறப்பட்டது. இருந்தபோதிலும் அந்த வரவைப் பற்றிய விவாதங்கள் நடந்து முடிந்த குளிர்காலக் கூட்டத் தொடரிலும் விவாதிக்கப்படவில்லை. கிரிப்டோகரன்சிகள் தொடர்பான சட்டங்கள் அமல்படுத்துவதைச் சற்றுகாலம் தள்ளி வைத்துள்ளதையே இது காட்டுகிறது.
1,000கோடிக்கும் அதிகமாக இந்த க்ரிப்டோகரன்சியில் முதலீடு
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு கவனிக்கப்பட வேண்டியது ஒன்று. உலகம் முழுவதும் பிட்காய்ன்களை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. அதில் ஐந்து மில்லியன் இந்தியர்கள் 1,000கோடிக்கும் அதிகமாக இந்த க்ரிப்டோகரன்சியில் முதலீடு செய்துள்ளதாக வசீர்எக்ஸ் என்ற க்ரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான நிக்கல் நிக்கல் ஷெட்டி ((Nischal Shetty) தெரிவித்திருந்தார். க்ரிப்டோகரன்சிகளைக் கண்ணை மூடிக்கொண்டு தடைசெய்ய வேண்டும் என்பது பொருளாதாரத்தில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் எனத் தெரியாது.
10நாடுகள் க்ரிப்டோகரன்சியைத் தடை செய்துள்ளன
ஆனால் பங்களாதேஷ், பாகிஸ்தான்,சவுதி அரேபியா, ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட 10நாடுகள் க்ரிப்டோகரன்சியைத் தடை செய்துள்ளன. சீனா, இந்தோனேசியா, நேபால் போன்ற நாடுகளில் இந்த க்ரிப்டோகரன்சி இருக்கலாம், ஆனால் வணிகப் பயன்பாட்டுக்கோ வேறு வகையான நேரடிப் பணப் பரிமாற்றங்களுக்கோ அவற்றை பயன்படுத்தத் தடை விதித்திருக்கின்றன.குறிப்பாக ஜப்பான, இங்கிலாந்து, ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி போன்ற 15நாடுகள் இந்த க்ரிப்டோகரன்சியை அதிகாரபூர்வமாக அங்கீகரித்திருக்கின்றன. இந்த நாடுகளை தவிர மற்ற நாடுகள் எந்த விதமான தடையும் அமல்படுத்தவில்லை,அதே சமயம் அதைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பிட்காய்ன் போன்ற க்ரிப்டோகரன்சிகளை பயன்படுத்துவதில் சிக்கல் என்னவென்றால், பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிக்க குறைந்த அளவிலேயே இருப்பதால். அதன் மதிப்பு ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மேலும் பல நாட்டு அரசுகளும் க்ரிப்டோகரன்சி தொடர்பான முடிவுகளை இன்னும் எடுக்காமல் இருப்பது தான் அதன் மதிப்பு நிலைத் தன்மையை
அடையாமல் தடுக்கிறது. பினபு பிட்காய்ன்கள் யாரிடம் இருக்கிறது,எங்கே செல்கிறது என்பதை அறிய முடியாது என்பதால் தான் அதை தடை செய்யவேண்டும் என பலரும் கூறுகின்றனர். ஆனால் இதில் பல்வேறு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர், காரணம் எவரிடம் இது இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியாது என்பதால்.
இந்தியா 2-வது இடத்தில் உள்ளது
இந்த க்ரிப்டோகரன்சிகளை அங்கீகரிப்பதன் மூலம் பல வகையான வேலை வாய்ப்பு உருவாகும் வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக ப்ளாக் செய்ன் டெவலப்பர்கள், மைனிங் செய்பவர்கள் என வேலைவாய்ப்புகள் உருவாகும். மேலும் 20,000 ப்ளாக் செய்ன் டெவரப்பர்களுடன் அமெரிக்கவிற்கு அடுத்தப்படியாக இந்தியா 2-வது இடத்தில் உள்ளது
தடை செய்யக்கூடாது
தற்சமயம் பிட்காய்ன் வைத்திருப்பவர்கள் அல்லது இது தொடர்பான் வேலைகள் கொண்டிருப்பவர்கள் என பலருக்கும் சில குழுப்பங்கள் இருக்கிறது. தற்போது உச்ச நீதி மன்றத் தீர்ப்பிலும், இது தொடர்பான சட்டங்கள் இல்லாத நிலையில்
ரிசர்வ் வங்கி க்ரிப்டோகரன்சியை தடை செய்யக்கூடாது, என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு க்ரிப்டோகரன்சி தொடர்பான வரையரைகளைப் பரிசீலனை செய்து, க்ரிப்டோகரன்சிக்கான சட்டத்தை விரைவில் அமல்படுத்தும் என பலரும் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக