Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 12 மார்ச், 2020

டெலிவரி செய்யும் போது கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஸ்விக்கி செய்யும் காரியத்தை பாருங்க!



 

தை படித்த பின்னராவது, வாடிக்கையாளர்கள் தைரியமாக ஆன்லைன் வழியாக ஆர்டர் செய்வார்கள் என்று ஸ்விக்கி நம்பலாம், நீங்கள் நம்புகிறீர்களா?


ஆன்லைன் வழியாக ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் வழியாக கொரோனா பரவுமா? இந்த கேள்விக்கு பதிலளிக்கும் வண்ணம், இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் உணவு ஆர்டரிங் மற்றும் டெலிவரி தளமான ஸ்விக்கி நிறுவனம், கொரோனா வைரஸைக் கையாள்வதற்கு அவர்கள் எடுத்த சில செயல்திறன்மிக்க நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அதன் வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்டுள்ளது.

"கோவிட்-19 (கொரோனா வைரஸ்) ஒரு உலகளாவிய கவலையாக இருப்பதால், அது பரவுவதற்கான வாய்ப்புகளை குறைக்க உதவும் சில செயல்திறன் மிக்க நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். எங்கள் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், விநியோக கூட்டாளர்கள் மற்றும் உணவக கூட்டாளர்களின் பாதுகாப்பு எப்போதுமே எங்களுக்கு முன்னுரிமைமிக்கது - இப்போது முன்பை விட அதிக முன்னுரிமையை வழங்குகிறோம்” என்று ஸ்விக்கி தனது வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது.



அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சூழலைப் பராமரிக்க ஸ்விக்கி நிறுவனம் அப்படி என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது? இதோ அது பற்றிய சுருக்கமான விளக்கம்:

1. எங்கள் டெலிவரி பார்ட்னர்களுக்கு தொடர்ந்து சுவாசம் சார்ந்த சுகாதாரம், அது சார்ந்த சரியான முறை மற்றும் எத்தனை முறை, எப்போதெல்லாம் கைகளை கழுவ வேண்டும் மற்றும் குறிப்பிட்ட வைரஸ் தாக்கத்துடன் தொடர்புடைய அறிகுறிகளை அடையாளம் காண்பது எப்படி போன்ற பயிற்சிகளை சிறந்த நடைமுறைகளில் தொடர்ந்து பெற்று வருகின்றனர்.

2. ஒரு டெலிவரி பார்ட்னர் குறிப்பிட்ட வைரஸ் உடன் தொடர்புடைய அறிகுறிகளைக் கண்டால், உடனடியாக எங்களை அணுகும்படியும், மருத்துவ நிபுணரை அணுகும்படியும் கேட்கப்படுகிறார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் எங்கள் நிறுவனத்தின் மெடிக்கல் பார்ட்னர்கள் மூலம் அவர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனையை வழங்குகிறோம்.

3. கொரோனா வைரஸ் சார்ந்த எந்தவொரு அறிகுறி இருந்தாலும், மருத்துவர்கள் பரிந்துரைக்கப்பட்ட காலத்திற்கு தங்களை அவர்களை அவர்களே தனிமைப்படுத்திக் கொள்ளும்படியும் நாங்கள் எங்கள் டெலிவரி பார்ட்னர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். இதுபோன்ற சூழ்நிலைகளில் அவர்களுக்கு நிதி ரீதியாக ஆதரவளிக்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

4. உணவுப் பொருட்களைக் கையாளும் போது மற்றும் பேக்கேஜிங் செய்யும் போது சிறந்த சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை அவர்கள் ஏற்கனவே அறிந்திருக்கிறார்கள், தற்போது அது கூடுதல் கண்காணிப்பின் கீழ் இருப்பதையும் உறுதிப்படுத்த நாங்கள் எங்கள் உணவக கூட்டாளர்களுடன் தொடர்பில் இருக்கிறோம்.

5. எல்லாவற்றிற்கும் மேலாக, உணவை ஆர்டர் செய்பவர்கள் ஒருவேளை உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அல்லது அவர்கள் விரும்பினால், அவர்களுக்கான உணவை வீட்டு வாசலிலேயே (ஆன்லைன் கட்டணம் செலுத்தியிருந்தால்) விட்டுவிடுமாறு டெலிவரி பார்ட்னரை நீங்கள் கேட்டுக்கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக