Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 12 மார்ச், 2020

இளைஞர்களுக்கு எம்.எல்.ஏ சீட் வழங்க திட்டம்-ரஜினி .


 rajini-to-give-mla-set-to-youth
ன்று  சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் ரஜினி செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். அப்போது பேசிய ரஜினி ,சமீபத்தில் மாவட்ட செயலாளர்களை சந்தித்தேன்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது கட்சி தொடங்குவது பற்றி ஆலோசித்தோம்.ஆனால் ஆலோசனையில் ஒரு விஷயத்தில் மட்டும் எனக்கு ஏமாற்றம்  என கூறினேன்.
நான் கூறிய அந்த விஷயம் ஊடகங்களில் பலவிதமாக  வதந்திகள் வெளியாகின அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே தற்போது இந்த பேட்டி என கூறினார்.
பின்னர் பேசிய அவர் எனது கட்சியில் 60 %முதல் 65 %வரை இளைஞர்களுக்கு எம்எல்ஏ சீட்டு வழங்கும் திட்டம் .தற்போது சட்டமன்றத்தில் வயதான நபர்களே இருக்கிறார்கள் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை .
நல்ல இளைஞர்களை நேரில் வீட்டிற்கு சென்று அவர்களை அரசியலுக்கு அழைத்து வர இருக்கிறேன்.மற்ற கட்சிகளில் வாய்ப்பில்லாமல் இருக்கும் நல்லவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என ரஜினி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக