சாதாரணமாக பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று
உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவத் தொடங்கிவிட்டது. கடல் கடந்து கொரோனா
இந்தியாவிற்கும் வந்துவிட்டது. இப்போது நாள்தோறும் கொரோனா குறித்த புதுப்புது
தகவல்கள் வரத்தொடங்கிவிட்டது. இதில் பெரும்பாலானவை வதந்திகளாகவே இருக்கிறது.
இப்போது யாருக்கு போன் செய்தாலும் நாம் முதலில் கேட்பது இருமல் சத்தத்தைத்தான்.
கொரோனா வைரஸிலிருந்து நம்மை பாதுகாத்துக்
கொள்ள பல கைகளை அடிக்கடி கழுவ வேண்டும், மற்றவர்களுக்கு கை கொடுக்கக்கூடாது, இருமும்போது
வாயை பொத்திக்கொள்ள வேண்டும் என பல எச்சரிக்கைகள் கூறப்பட்டுள்ளன. ஆனால் கொரோனா வைரஸ்
நமது போனிலும் இருக்கக்கூடும் என்பது பலரும் அறியாத ஒன்றாகும். இந்த நிலையில் தமிழ்நாட்டில்
கொரோனா வைரஸை தடுக்க தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்தியாவில்
கொரோனா
கடந்த வாரம் இந்தியாவிலும் கொரோனா பரவ
தொடங்கியது. பல்வேறு வெளிநாடுகளில் இருந்து திரும்பிய இந்தியர்கள் மூலம்
இந்தியாவிற்குள் கொரோனா நுழைந்து விட்டது. இதுவரை 42 பேருக்கு கொரோனா இருப்பது
உறுதிசெய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கடுமையான கண்காணிப்பின்
கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று
கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில்
கொரோனா வைரஸ்
ஓமனில் இருந்து காஞ்சிபுரம் வந்த
தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு
அவருக்கு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் இருமலும், காய்ச்சலும் மட்டும் இருந்த நிலையில் அவர் மருத்துவரை
அணுகிய போது எடுக்கப்பட்ட சோதனைகள் அவருக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்தது.
அரசாங்கத்தின்
பதில்
இதுகுறித்த தமிழ்நாட்டின்
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில் " தமிழ்நாட்டின் முதல் கொரோனா
பாதிப்பு இது " என்று உறுதி செய்தார். மேலும் மக்களை அச்சப்படாமல் தைரியத்துடன்
இருக்கும்படியும், பாதிக்கப்பட்டவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்
கூறியுள்ளார்.
கொரோனா கட்டுப்பாட்டு அறை
கொரோனா
வைரஸை கட்டுப்படுத்தவும் அதனைப்பற்றிய தகவல்களையும், சந்தேகங்களையும் தெரிந்து
கொள்ள தமிழக அரசு 24 மணி நேர புகார் மையங்களை திறந்துள்ளது. கொரோனா வைரஸ் குறித்த
எந்த சந்தேகம் இருந்தாலும், உதவி தேவைப்பட்டாலும் "இந்த தொலைப்பேசி எண்களுக்கு
எப்போது வேண்டுமென்றாலும் அழைக்கலாம். லேண்ட்லைன் நம்பர்: 044-2951 0400, 044-2951
0500, மொபைல் எண்: 94443 40496, 87544 48477"
ஆன்லைன் வதந்திகள்
கொரோனா
வைரஸ் குறித்த நாளுக்கு நாள் வதந்திகள் பரவிக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில்
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட
56 நபர்களில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா இருப்பது உறுதிசெய்யப்ட்டுள்ளதாக
கூறியுள்ளார். மேலும் கொரோனா குறித்து சமூக வலைத்தளங்களில் உலாவும் வதந்திகளுக்கு
கடும் கண்டனம் தெரிவித்த அமைச்சர் கொரோனா குறித்து அரசு வெளியிடும் தகவல்களை மட்டும்
நம்புமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் சமூக வலைதளத்தில் இதுகுறித்த
வதந்திகளை வெளியிடுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக