Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 11 மார்ச், 2020

ம.பி. அரசியல் அதிரடி: பாஜகவில் இணைந்தார் ஜோதிராதித்ய சிந்தியா!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா இன்று பாஜகவில் இணைந்தார்.

மத்தியப் பிரதேசத்தில் அடுத்தடுத்து அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செல்வாக்கு மிகுந்த தலைவராக இருந்தவர் ஜோதிராதித்ய சிந்தியா. இவருக்கு தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால் காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று விலகினார். அவருக்கு ஆதரவாக 22 எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இதனால் 15 மாதங்களே ஆன காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. போதிய பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி கவிழும் என்று கூறப்படுகிறது. எனவே தங்கள் தரப்பு எம்.எல்.ஏக்களை பாதுகாப்பாக வைக்க வெளிமாநிலங்களில் உள்ள விடுதிகளில் தங்க வைத்துள்ளனர்.

இந்நிலையில் ஜோதிராதித்ய சிந்தியா இன்று பாஜகவில் இணையவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவருக்கு ராஜ்ய சபா எம்.பி பதவியும், அமைச்சரவையில் இடமும் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜோதிராதித்ய சிந்தியாவின் தந்தை மாதவராவ் சிந்தியா தொடக்க காலத்தில் ஜன சங்கத்தின் எம்.பியாக இருந்தவர். இந்நிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார்.

 அப்போது அவருக்கான பாஜக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்கள் குடும்பத்திற்குள் அழைத்து எனக்கு வாய்ப்பளித்த ஜே.பி நட்டா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் நன்றி.

எனது வாழ்க்கையை புரட்டி போட்ட இரண்டு முக்கிய நிகழ்வுகளைப் பற்றி இங்கே கூறுகிறேன். ஒன்று எனது தந்தையை நான் இழந்தது. இரண்டாவது எனது வாழ்வின் புதிய பாதையில் செல்ல நேற்று எடுத்த முடிவு. இனி காங்கிரஸ் கட்சிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக