கடந்த 5 ஆண்டுகளில் உருவாக்கம் பெற்ற Intel processor கொண்டு இயங்கும் மடிக்கணிகளை வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு; உங்களுக்கு ஒரு எச்சரிக்கை!
நீங்கள் இன்டெல் சிப்பை உள்ளடக்கிய
லேப்டாப்பை பயன்படுத்துகிறீர்கள் என்றால், நீங்களளொரு ஆபத்தில் இருக்கிறீர்கள். ஆம்
சமீபத்தில் வெளியான ஒரு புதிய ஆராய்ச்சியின் படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட
அனைத்து இன்டெல் சிப்களும் ஆபத்தில் உள்ளன.
அப்படி என்ன ஆபத்து?
பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதிய பாதுகாப்பு குறைபாட்டால், வன்பொருள் அடிப்படையிலான குறியாக்கம் (hardware-based encryption) மற்றும் டிஆர்எம் பாதுகாப்புகளையும் (DRM protections) சமாளிக்க முடியும்.
இதனால் என்னென்ன விபரீதங்கள் ஏற்படக்கூடும்?
பாதுகாப்பு நிறுவனமான பாசிட்டிவ் டெக்னாலஜிஸ் தான் இன்டெல் சிப்களில் உள்ள இந்த குறைபாட்டைக் கண்டறிந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட சிப்செட்களில் இந்த புதிய குறைபாடு இருப்பதாகவும், இது வன்பொருள் மட்டத்தில் இயங்கும் ஸ்பெஷல் மால்வேரை உருவாக்க ஹேக்கர்களுக்கு உதவக்கூடும் என்றும், இதை வழக்கமான ஆன்ட்டி வைரஸால் இதை கண்டறிய முடியாது என்றும் பாதுகாப்பு நிறுவனம் கூறுகிறது.
யாரெல்லாம் இதிலிருந்து எஸ்கேப் ஆகலாம்?
இந்த குறைபாடு 10த் ஜெனரேஷன் சிப்களை பாதிக்காது என்பதை பாசிட்டிவ் டெக்னாலஜிஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், “இந்த பாதிப்பு இன்டெல் நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை தகர்க்கும்படி உள்ளது. ஏனெனில் இந்த பாதிப்பு வன்பொருள் மட்டத்தில் ஒரு "சமரசத்தை" அனுமதிப்பதால், இது ஒட்டுமொத்த தளத்திற்கான நம்பிக்கையையும் அழிக்கிறது.”
எல்லாவற்றை விடவும் திகிலான விடயம் என்னவென்றால்?
இன்டெல்லின் கன்வெர்ஜ் செக்யூரிட்டி மேனேஜ்மென்ட் இன்ஜினில் (சிஎஸ்எம்இ) உள்ள இந்த குறைபாட்டிற்கு முக்கிய காரணம் நிறுவனத்தின் சிப்களின் ஒரு பகுதியே ஆகும். அந்த சிப் பகுதியானது இன்டெலால் சக்தியூட்டப்படும் கணினிகளில் இயங்கும் அனைத்து ஃபார்ம்வேர்களையும் பாதுகாப்பதற்கான பொறுப்பை கொண்டுள்ளது என்பது தான் மிகவும் பீதியான விடயமாகும்.
இது ஒன்னும் புதுசு இல்ல!
இப்படியான பாதுகாப்பு குறைபாடுகளை இன்டெல் சந்திப்பது மற்றும் அதனுடன் போராடுவது இது முதல் முறை அல்ல. மெல்டவுன் மற்றும் ஸ்பெக்டர் ப்ராசஸர்களில் கடந்த ஜனவரி 2018 இல் இதேபோன்றதொரு பாதிப்பு கண்டறியப்பட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக