![](https://static.langimg.com/thumb/msid-74588669,width-630,resizemode-4,imgsize-155740/74588669.jpg)
கன்னட
நடிகர் யஷ் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அவரின் செல்ல மகள் அய்ரா கோபமாக இருப்பதை
பார்த்து ரசிகர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
யஷ்
கே.ஜி.எப்.
படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார் கன்னட நடிகர் யஷ். அவருக்கு அய்ரா
என்கிற மகளும், ஆயுஷ் என்கிற மகனும் உள்ளனர். அய்ரா பிறந்த ஆறு மாதத்தில் யஷின்
மனைவி ராதிகா பண்டிட் மீண்டும் கர்ப்பமானதை பார்த்து சமூக வலைதளவாசிகள் அவர்களை
விளாசினார்கள். படித்தவர்கள் தானே ஒரு குழந்தைக்கும், இன்னொரு குழந்தைக்கும் இடையே
இடைவெளி விட வேண்டும் என்று கூடவா தெரியாது என்று கேட்டனர்.
அய்ரா
யஷ்
தன் செல்ல மகள் அய்ராவுக்கு மொட்டை போட்டுள்ளார். வெயில் காலம் என்பதால்
பாப்பாவுக்கு மொட்டை அடித்துள்ளனர். இந்நிலையில் யஷ் தனது மகளுடன் எடுத்துள்ள புகைப்படத்தை
இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அய்ரா தன் அப்பாவை பயங்கர
கோபமாக பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை
ஈர்த்துள்ளது.
கோபக்கார குழந்தை
வழக்கமாக
புகைப்படத்திற்கு சிரித்தபடி போஸ் கொடுக்கும் அய்ரா இப்படி அப்பாவை முறைப்பதை
பார்த்த ரசிகர்களால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. புகைப்படத்தை வெளியிட்டு யஷ்
கூறியிருப்பதாவது, அய்ரா: அப்பா, இது வெயில் காலம் என்று எனக்கு தெரியும். ஆனால்
இது சம்மர் கட் இல்லை என்பதும் எனக்கு தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜே.ஜி.எப். 2
கே.ஜி.எப்.
படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து
வருகிறார் யஷ். கே.ஜி.எப். படத்தை தமிழில் விஷால் வெளியிட்டார். இரண்டாம்
பாகத்தையும் அவரே தமிழகத்தில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யஷ்
தனது சொந்த தம்பி போன்றவர் என்று விஷால் முன்பு தெரிவித்திருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக