Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 12 மார்ச், 2020

பிரபல ஹாலிவுட் நடிகருக்கு கொரோனா: அதிர்ச்சியில் திரையுலகம்!

Tom Hanks

ஸ்கர் விருது வென்ற பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹான்க்ஸ்-க்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை நாடு, பணக்கார நாடு என்ற எந்த பேதமும் இன்றி அனைத்து இடங்களிலும் பரவி உயிரை பறித்து வருகிறது கொரோனா.

இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹான்க்ஸ் தனக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஹாலிவுட்டின் பிரபலமான நடிகரான டாம் ஹான்க்ஸ் ஆறு முறை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டு இரண்டு முறை விருதை வென்றவர்.

தனது மனைவியுடன் ஆஸ்திரேலியா சென்றிருந்த இவர் உடல்சோர்வு காரணமாக மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது ஹான்க்ஸ் மற்றும் அவரது மனைவிக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள ஹான்க்ஸ் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

டாம் ஹான்க்ஸூக்கு கொரோனா பரவியுள்ள சம்பவம் உலகளாவிய அவரது ரசிகர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக