Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 26 மார்ச், 2020

இனி ரோபோ தான் சிகிச்சை., கொரோனா வார்டில் அதிரடி: சென்னையில் எந்திரன் பட காட்சி!


உலகிலேயே இன்று பெரும் அச்சுறுத்தலில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ், இந்தியாவிலும் தன் வேலையை காட்டி வருகிறது. மேலும் கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் நாளை (மார்ச் 24) மாலை ஆறு மணி தொடங்கி மார்ச் 31ம் தேதி வரை 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும்

அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும் என்றும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் இயங்கும் என தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கொரோனா வைரஸின் தாக்கத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நாட்களில் மக்கள் வீட்டிலேயே தங்கியிருக்கும் படி கை கூப்பி கேட்டுக் கொண்டார். நாட்டின் வளர்ச்சியை விட மக்களின் உயிர் தான் முக்கியம் எனவும் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் தொற்று

கொரோனா வைரஸ் தொற்று இருப்பவர்களுடன் நேரடி தொடர்பு வைத்திருந்தால் வைரஸ் தொற்று வேகமாக பரவும் அபாயம் இருக்கிறது. இருப்பினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளை நேரடியாக சோதித்து பார்க்க வேண்டிய கட்டாயத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்

தொழில்நுட்ப ரீதியாக தீர்வு

இதை தடுக்கும் விதமாக தொழில்நுட்ப ரீதியாக தீர்வு காண சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஜெயந்தி கூறுயது குறித்து பார்க்கலாம்.

உயர் தொழில் நுட்ப மருத்துவ வசதி

கொரோனாவை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும், கொரோனா நோயாளிகளுக்கு என உயர் தொழில் நுட்ப மருத்துவ வசதி ஆகியவை தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளன.

அதேபோல் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் பணியாளர்கள் கொரோனா நோயாளிகளுக்கு தண்ணீர், உணவு மாத்திரை மருந்து உள்ளிட்டவைகள் வழங்குவதற்கு தினமும் நோயாளிகளோடு நேரடி தொடர்பு வைத்திருக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது

தொழில்நுட்ப ரீதியிலான நடவடிக்கைகள்

இதை தவிர்க்கும் விதமாக தொழில்நுட்ப ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ள ரோபோக்களை பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த சேவைகளுக்கு பயன்படுத்தப்படும் ரோபோக்கள் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் அறைகளுக்கு சென்றதும் ஒலி எழுப்பும்.

ரோபோவிடம் இருந்து மருந்து, உணவு

நோயாளிகள் கதவை திறந்து ரோபோவிடம் இருந்து மருந்து, உணவு உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்ளலாம்.அதேபோல் ரோபோக்களில் பொருத்தப்பட்டிருக்கும் வீடியோ மூலம் நோயாளிகளுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கலாம்.

சானிடைசர் மூலம் ரோபோ சுத்தப்படுத்தப்படும்

அதேபோல் நோயாளிகளுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் ரோபோ மூலம் டாக்டர்களிடம் தங்கள் சந்தேகத்தை கேட்கலாம். மேலும் ரோபோ கொரோனா நோயாளிகள் வார்டில் இருந்து வெளியே வந்தவுடன் சானிடைசர் மூலம் ரோபோ சுத்தப்படுத்தப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக