Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 26 மார்ச், 2020

பெட்ரோல் பங்குகள் இனி 5 மணி நேரம்தான் இயங்கும்?

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகம் முழுவதும் மார்ச் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் பாலகங்கள், காய்கறி கடைகள், மளிகைக் கடைகள், மருந்தகங்கள், பெட்ரோல் பங்கு போன்றவை வழக்கம்போல் செயல்படலாம் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

இந்த நிலையில், தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர் சங்கம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.

அதில், "தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இருப்பினும் வாகன ஓட்டிகள் கட்டுப்பாடின்றி எல்லா நேரத்திலும் பெட்ரோல் பங்குகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

அவர்களின் இந்தப் போக்கை கட்டுப்படுத்தும் நோக்கில், மாநில முழுவதும் உள்ள பெட்ரோலிய பங்குகளை தினமும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்க வேண்டும்.

அதேசமயம், பால் வேன்கள், காய்கறி வண்டிகள், அவசரகால ஊர்திகள் போன்றவற்றுக்கு தேவையான எரிபொருள்களை அளிக்க 24 மணிநேரமும் செயல்பட தயார்" என்று இந்த சங்கத்தின் தலைவர் முரளி, முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக