Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 31 மார்ச், 2020

BSNL வருடாந்திர திட்டம் உட்பட மேலும் 5 ப்ரீபெய்ட் திட்டங்களில் புதிய மாற்றம்!






PV 186 மற்றும் STV 187 திட்டங்கள்
ஏறக்குறைய நான்கு மாதங்களாக நாம் அனைவரும் எதிர்பார்க்கும் மாற்றங்களை பிஎஸ்என்எல் ஒருவழியாகச் செய்து முடிந்துவிட்டது. பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிரபலமான ரூ.1,699 என்ற நீண்டகால திட்டத்தின் செல்லுபடியை நாட்களை 300 நாட்கள் என்று அதிகாரப்பூர்வமாகக் குறைத்துள்ளது.

மேற்கொள்ளப்பட்ட புதிய மாற்றங்கள்
பிஎஸ்என்எல் நிறுவனம் தனதுவருடாந்திர திட்டம் மட்டுமில்லாமல் இத்துடன் சேர்த்து பி.வி 186, எஸ்.டி.வி 187, எஸ்.டி.வி 98, எஸ்.டி.வி 99 மற்றும் எஸ்.டி.வி 319 ஆகிய ஐந்து ப்ரீபெய்ட் திட்டங்களையும் அரசுக்குச் சொந்தமான டெல்கோ நிறுவனம் தற்பொழுது திருத்தியுள்ளது. இதில் என்ன மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் ரூ.1,699 திட்டம்
பிஎஸ்என்எல்லில் இருந்து கிடைக்கும் ரூ.1,699 என்ற ஒரு ஆண்டு திட்டத்தின் செல்லுபடியாகும் நாட்கள் திருத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் நன்மைகள் அப்படியே இருக்கின்றது, ஒரு நாளைக்கு 250 நிமிட குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 2 ஜிபி தினசரி டேட்டா போன்றவை அப்படியே உள்ளது. இதன் வேலிடிட்டி மட்டும் 300 நாட்கள் என்று மாற்றப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் 250 நிமிடங்கள் முடிந்த பிறகு, பயனர்களின் அடிப்படை திட்டத்தின் படி கட்டணம் வசூலிக்கப்படுவார்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட தினசரி நன்மைக்குப் பிறகு டேட்டா வேகம் 80 Kbps ஆக குறைக்கப்படும். இந்த ரூ.1,699 வருடாந்திர திட்டத்துடன், பயனர்களுக்கு லோக்தூன் உள்ளடக்கத்தின் நன்மைகளும் 60 நாட்களுக்குக் கிடைக்கிறது. 300 நாட்களுக்கு பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் சந்தாவும் வழங்கப்படுகிறது.
PV 186 மற்றும் STV 187 திட்டங்கள்
பிஎஸ்என்எல் வருடாந்திர திட்டத்துடன் பி.வி.186 மற்றும் எஸ்டிவி 187 ஆகிய திட்டங்களிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இரண்டு ப்ரீபெய்ட் பேக்குகளும் இப்போது ஒரு நாளைக்கு 250 நிமிட குரல் அழைப்புகள், தினசரி 2 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ். என்று 28 நாட்களுக்குக் கிடைக்கிறது. 2 ஜிபி டேட்டாவிற்கு பிறகு 80கபிப்ஸ் என்ற வேகத்தில் வரம்பற்ற டேட்டா நன்மை வழங்கப்படுகிறது.
எஸ்.டி.வி 187 மற்றும் பி.வி 186 திட்டங்கள்
இந்த புதிய திருத்தத்திற்கு முன்பு, எஸ்.டி.வி 187 மற்றும் பி.வி 186 திட்டங்கள் 3 ஜிபி தினசரி டேட்டா நன்மைகளுடன் கிடைக்கப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இது 2 ஜிபி டேட்டாவாக குறைக்கப்பட்டுள்ளது. பல மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதால் பட்ஜெட்டில் இதுபோன்ற உயர் தரவுத் திட்டங்களை வழங்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு பி.எஸ்.என்.எல். இந்த திருத்தத்தை மேற்கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
மூன்று பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்களிள் மாற்றம்
மேலும் மூன்று பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்களின் செல்லுபடியாகும் காலம் குறைக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல் இன் டேட்டா ஒன்லி திட்டமான எஸ்.டி.வி 98 திட்டம் இப்போது ஒரு நாளைக்கு 2 ஜி.பை டேட்டா நன்மை மற்றும் ஈரோஸ் நவ் சந்தா ஆகின நன்மைகளுடன் 22 நாட்களுக்கு வரம்பற்ற டேட்டா நன்மைகளை வழங்குகிறது. அதேபோல் எஸ்.டி.வி 99 திட்டத்தின் கீழ் தினமும் 250 நிமிட குரல் அழைப்பை என்று முன்பு வழங்கப்பட 24 நாட்கள் வேலிடிட்டியில் இருந்து 22 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
 எஸ்.டி.வி 319 திட்டம்
இறுதியாக, பி.எஸ்.என்.எல் இன் குரல் மட்டும் திட்டம் என்று அழைக்கப்படும் எஸ்.டி.வி 319 திட்டம் இப்போது 75 நாட்கள் வேலிடிட்டி என்று மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எஸ்.டி.வி 319 திட்டத்தின் நன்மைகள் ஹோம் எல்.எஸ்.ஏ மற்றும் மும்பை மற்றும் டெல்லி வட்டங்களைத் தவிர்த்து தேசிய ரோமிங்கில் ஒரு நாளைக்கு 250 நிமிட குரல் அழைப்பு நிமிடங்களை வழங்குகிறது.
ஏப்ரல் 1, 2020 முதல் நடைமுறை
திருத்தப்பட்ட அனைத்து புதிய நன்மைகளும் ஏப்ரல் 1, 2020 முதல், பிஎஸ்என்எல் இப்போது இயங்கும் அனைத்து வட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று பி.எஸ்.என்.எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிஎஸ்என்எல் தற்போதைய திட்டங்களின் கீழ் கிடைக்கும் டேட்டா நன்மை மற்றும் செல்லுபடி காலத்தைக் குறைத்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை தேவையற்றது என்றே கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக